ஆம் கொள்ளை தான் அடித்தார்கள் இதோ முழுவிபரம்...
1987ல் இருந்து 2016 வரை அவர் கொள்ளை அடித்தது ஏராளம்
ஒவ்வொன்றாக சொல்கிறேன்...
ஒவ்வொன்றாக சொல்கிறேன்...
1987ல் தலைவர் இறந்த பிறகு துரோகிகளின் கரங்களுக்கு கட்சி சென்றுவிடாமல் தனி ஒரு பெண்ணாக போராடி ரத்தத்தின் ரத்தங்களாகிய பல கோடி கழக உடன்பிறப்புக்களை தன் அரசியல் போராட்டத்தால் கொள்ளையடித்தார்...
சிதறி கிடந்த இதயங்களையும் தன் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் தன் விடாமுயற்சியால் மீட்டெடுத்தார்...
அதிகமுகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது என்று எக்காளமிட்ட துரோகிகளின் எண்ணங்களையும் சதிகளையும் வென்று தனி ஒரு பெண்ணாக அதிமுக எனும் பேரியக்கத்தின் தலைவியாக பொறுப்பேற்று கடைக்கோடி தொண்டன் மனதையும் கொள்ளையடித்தார்...
பெண்பிள்ளைகளை சாபக்கேடு எனக் கருதி கள்ளிப்பால் கொடுத்து கொன்ற கயவர்களிடமிருந்து தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்து எத்தனையோ பெண்களின் இதயத்தை கொள்ளையடித்தார்...
அதுபோலவே இந்தியாவிலே மகளிர்க்கென தனி காவல்நிலையங்களை உருவாக்கி துணிச்சலும் திறமையும் மிக்க பல பெண் காவலர்களை உருவாக்கி
பல மாநில மக்கள் மனதை கொள்ளையடித்தார்....
பல மாநில மக்கள் மனதை கொள்ளையடித்தார்....
ஏழை மக்களின் நிலங்களை எல்லாம் ஆதிக்க வெறியர்களின் கரங்களிலிருந்து கொள்ளையடித்து உரியவர்களிடமே ஒப்படைத்தார்....
மழை வெள்ள மீட்புப் பணியில் மகத்தான சாதனை புரிந்து
அமெரிக்க அரசின் இதயத்தையும் கொள்ளையடித்து தங்கத்தாரகை விருதுபெற்றார்....
அமெரிக்க அரசின் இதயத்தையும் கொள்ளையடித்து தங்கத்தாரகை விருதுபெற்றார்....
தன் மக்கள் எவருமே பசியால் வாடிவிட கூடாது என மலிவுவிலை அம்மா உணவகங்களை திறந்து பசியால் வாடிய பல உயிர்களின் இதயத்தை கொள்ளையடித்தார்....
உண்மையாக உழைத்தால் அவன் முதல்வராகவும் வரலாம் என கட்சியின் உறுப்பினர்களுக்கு நல்ல பதவிகள் கொடுத்து தன் கட்சியை ராணுவ கட்டுக்கோப்பாக நடத்தி ரத்தத்தின் ரத்தங்களின் இதயத்தையும் கொள்ளையடித்தார்....
மக்களுக்காக நான் மக்களால் நான் என்ற வார்த்தையை இறுதிவரை காப்பாற்றி
இறுதியில்
மிகப்பெரிய இதயக்கொள்ளையை செய்து வங்கக்கடலின் ஓரம் தங்கத்தமிழ் நாட்டின்
ஒற்றை பெண்சிங்கம்
நான் வணங்கும் கடவுள் துயில் கொண்டார்...
இறுதியில்
மிகப்பெரிய இதயக்கொள்ளையை செய்து வங்கக்கடலின் ஓரம் தங்கத்தமிழ் நாட்டின்
ஒற்றை பெண்சிங்கம்
நான் வணங்கும் கடவுள் துயில் கொண்டார்...
ஆம் கர்வமாக
சொல்லிக் கொள்கிறேன்
மக்கள் மனதை
கொள்ளை கொண்ட மாபெரும் தலைவியின்
பிள்ளை என்று....
சொல்லிக் கொள்கிறேன்
மக்கள் மனதை
கொள்ளை கொண்ட மாபெரும் தலைவியின்
பிள்ளை என்று....
No comments:
Post a Comment