Saturday, September 8, 2018

நிம்மதி நிலைக்கட்டும்...


1)நிம்மதி என்பது குளிர்ந்த நீரோடையில் தெளிந்த நீரைப்போல இருக்கின்ற மனம்
என்று பொருள்படும்.
2)தர்மம் மீறப்படும் இடத்தில் தான் நிம்மதி பறி போகின்றது.தர்மத்தை மீண்டும் செயல்படுத்த
மீண்டும் நிம்மதி குடிகொள்ளும்.ஆனால்,மனம்
மீண்டும் ஒரு நிலைப்படும் வரையில் அமைதி காக்கவேண்டும்.
3)பாவம் செய்ய ஆரம்பிப்பவன் நிம்மதியை இழக்க ஆரம்பிப்பான்.பாவம் செய்து,செய்து
முற்றிலும் நிம்மதிக்கு காரணமான புண்ணிய கர்மத்தை இழந்தபின் அவனது பாவம் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
4)நிம்மதி என்பது நிலைக்கண்ணாடி போல, அலங்கரித்து கண்ணாடி முன் நிற்பவருக்கு தெளிந்த பிம்பத்தை காட்டும்பொழுதே அதை பார்ப்பவருக்கு மகிழ்ச்சி ஏற்படும்.அதேபோல தன்னையும் நல்ல எண்ணங்களால் நிரப்பி பிறரையும் நல்லவர்களாக காணும் ஒருவரின்
மனமே எப்பொழுதும் நிம்மதி அடையும்.
5)சத்தியமும்,அன்பும் நிறைந்த இடத்தில் தான் நிம்மதி ஜனனிக்கும்.நிம்மதியை ஒருவன் இறைவனிடம் அனுபவம் செய்ய அவரிடம் நன்றியும்,விசுவாசமும் உடையவராக இருத்தல் அவசியம்.
6)உனக்குள் அனுபவம் செய்தால் அது நிம்மதி.
அந்த நிம்மதியை நீ பலருக்கு வழங்கினால் அது அமைதி.
7)திருப்தியாக இருந்தால் தான் நிம்மதி ஏற்படும்.நிம்மதி இருந்தால் தான் திருப்தி
ஏற்படும்.இரன்டுமே அண்ணன்,தம்பிகள் ஆனால், எது முதலில் இருக்கவேண்டும் என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும்.
8)உடல் என்று நினைப்பவனுக்கு உடலின் உறவினர்களின் நினைவு.உடலுக்கு தேவையான உபகரணங்களின் நினைவு.
பதார்த்தங்களின் நினைவு என்று கிளைகள்
நீண்டுகொண்டே போகும்.தான் ஒரு உடலை
இயக்கும் உயிர் என நினைப்பவனோ தந்தை
பரமாத்மா ஈசனின் நினைவில் நிம்மதியை
நித்தியமாக அடைந்து இன்புறுகின்றான்.
9)காலையில் எழும்பொழுது இறைவனுக்கு
அர்ப்பணித்து நாளை துவக்குபவனுக்கும், இரவு உறங்கும்பொழுது சத்தியமாய் நடந்து இறைவனிடம் கணக்கை ஒப்படைத்து நன்றி கூறிஉறங்குபவனுக்கும் நாளெல்லாம் நிம்மதி
நிறைந்த திருநாளே.
10) எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து ஆழ்ந்து யோசித்த பிறகு செய்பவன் ஒருநாளும் தனது நிம்மதியை எதற்காகவும் இழக்கமாட்டான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...