Saturday, September 8, 2018

" வெள்ளரிக்காய் "


காய்கறிகளிலேயே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய் தான்.
அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடைய வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது.
நன்கு செரிமானம் ஆகக்கூடியது, சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது மட்டுமல்லாமல், இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.
இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள், வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது, அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது.
மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ‘பி’ஆகியவை அமைந்துள்ளன, விட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.
வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.
மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளின் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும்.
வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு.
இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...