திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது.
திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.
திருப்பூவணம் - இத்திருத்தலம் மூவர் தேவாரமும் பெற்றது,
மதுரையின் கிழக்கு வாயிலாக விளங்கியது; 36ஆவது திருவிளையாடல் நடைபெற்ற இடம்; கரூர் தேவரும், அருணகிரிநாதரும் பாடிய பெருமையுடையது;ஆனால் தற்போது திருப்பூவணம் என்ற பொருள் பொதிந்த காரணப் பெயரானது, காரணகாரியம் ஏதுமின்றித் திருப்புவனம் என்ற பொருளற்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

திருப்பூவணம் என்ற பெயருக்கான காரணத்தை காண்போம்.
திருப்பூவணன் - என்பது சிவலிங்கத்தின் பெயர்
மின்னாள் - என்பது அம்மையின் பெயர்
திருப்பூவணத்தில் உள்ள மூலலிங்கத்திற்குப் பூவணன் என்று பெயர்.
அணங்கு என்றால் பெண் தெய்வம்
அணன் என்றால் ஆண் தெய்வம்
மின்னாள் - என்பது அம்மையின் பெயர்
திருப்பூவணத்தில் உள்ள மூலலிங்கத்திற்குப் பூவணன் என்று பெயர்.
அணங்கு என்றால் பெண் தெய்வம்
அணன் என்றால் ஆண் தெய்வம்
கருப்பு ஆனவன் - கருப்பணன்
தேவன் ஆனவன் - தேவணன்
வானம் ஆனவன் - வாணன் (அம்பலவாணன் )
பா ஆனவன் - பாவணன்
இதே போன்று
பூ ஆனவன் -பூவணன் என்றானது.
திருப்பூவணத்தில் உள்ள மூலலிங்கம் பாரிசாதப் பூவால் ஆனது.
பூ ஆனவன் -பூவணன் என்றானது.
திருப்பூவணத்தில் உள்ள மூலலிங்கம் பாரிசாதப் பூவால் ஆனது.
"செய்யவொண்பட்டினாலுந்திகழ்ந்தவெண்பட்டினாலுந்
துய்யபூங்கதலிபூகமாதியதொங்கறன்னா
லைதிகழ்பூவணத்தெம்மடிகளையலங்கரித்தோர்
பையழகொழுகுந்துத்திப்பன்னகாபரணனாவார்" ...திருப்பூவண புராணம்...
துய்யபூங்கதலிபூகமாதியதொங்கறன்னா
லைதிகழ்பூவணத்தெம்மடிகளையலங்கரித்தோர்
பையழகொழுகுந்துத்திப்பன்னகாபரணனாவார்" ...திருப்பூவண புராணம்...
என்ற பாடலிலே, பூங்கதலி (பூந்தார்) சிவலிங்கமாகச் சமைந்திருக்கின்ற (A Fossil of Parijatha Flower) செய்திகூறப்பட்டுள்ளது.
இதனால், "பூவால் ஆகிய சிவலிங்கத்திற்குப் பூவணன்" என்பது ஊரின் பெயராகி திருப்பூவணம் என்று அழகுற அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment