Monday, September 3, 2018

மீண்டும் மூக்கறுப்போம்....

ஒருமுறை அடிபட்டது போதாது என்று, மீண்டும் நமது ஒற்றுமையை சோதிக்கும் விதமாய், நாளை 4ம் தேதி, மியூசிக் அகாடமியில், மு.க.விற்கு முக்தி கிடைக்க ஏற்பாடு...
வாழ்நாள் முழுதும் இந்துமத துவேஷம், இந்துக்களை புண்படுத்துவதே கொள்கை, வர்ணபேத வசை, பூணல் அறுப்பதே பொழுதுபோக்கு என ஆரிய திராவிட பிரிவினை வைத்து அரசியல் பிழைத்தோர்க்கு, எப்படியும் அறம் கூற்றாக நிற்கும். 
செய்த பாவத்தின் கர்ம பலனை அந்த ஜீவனும், அந்த ஜீவனை சார்ந்தோரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதி.
ஆனால்.. டாக்டர் ஜெகத் அவர்கள்,
தனது ஆழ்ந்த ஆன்மீக உணர்வை, தனது அரசியல் நிகழ்வோடு கலக்க நினைக்கிறார். இவரது இந்த ஆன்மீக அரசியல் அவசியமற்றது.
ஒருவேளை, இதை, தனது உண்மையான தலைவரான திரு.எம்.ஜி.யாருக்கு செய்திருந்தால் கூட, அதில் ஒரு அர்த்தமும் நியாயமும் இருந்திருக்கும்..
இன்று கல்வியாளர், தொழிலதிபர் என பன்முக வித்தகராய் விளங்கும் திரு. ஜகத் அவர்களை, வெளிஉலகிற்கு அடையாளம் காட்டிய, திரு. எம்.ஜி.ஆர். ஆன்மாவிற்கு, இதுபோல் ஏதும் செய்தாரா என்பது தெரியவில்லை..
பின் எதற்காக இந்த நாத்திக பெருமகனாருக்கு இத்தனை ஏற்பாடு...
ஆனால், திரு.மு.க.வோ, தனது, வாழ்நாள் முழுதும், பரமபத வாசிகளை பரிகாசம் செய்திருக்கிறாரே தவிர, பிதாபரிசுத்த ஆவிகளை பரிகசித்ததில்லை..
கார்த்திகை நோன்பை கிண்டலடிப்பாரே அன்றி, மிஞ்சிய நோன்பு கஞ்சியை, உறிஞ்ச ஒருபோதும் தவறியதில்லை..
அதனால், மரணித்தவருக்கு பரலோக சாம்ராஜ்ஜியத்தில், பதவி பிரமாணம் செய்ய, சுவிசேஷ ஜபத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.
இல்லையேல், புதைக்கபட்டவருக்கு, ஏழுவழி ஏற ஏற்பாடு செய்திருக்கலாம்..
அதைவிடுத்து, எதற்கு இந்த அர்த்தமற்ற அஞ்சலி...??
எப்படியும், உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என நினைக்கும், எந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் இதற்கு வரப்போவதில்லை.. நமசிவாயத்தை நம்பும் குரவோர்கள் இதில் கலந்து கொள்ளப்போவதும் இல்லை..
ஏனெனில்,
இவர் குடுமியை கத்தரித்து குதூகலம் கண்டவர்.. பூணூலை அறுத்து பூரிப்பு அடைந்தவர்.
திருமண்ணையும், திருநீறையும் அசிங்கப் படுத்துவதில் ஆனந்தம் கண்டவர்..
குங்குமம் மஞ்சளை கேலி செய்தவர். தாலி அறுப்பதே திராவிடம் என்றவர்.
இப்படி வாழ்ந்து இறந்தவருக்கு, சிவலோக பதவிக்கு சிபாரிசு ஏன்?? பரமபதம் போக பாசுரம் ஏன்?
இனி, இந்துக்களை ஏளனம் செய்யும் எவரும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது..
சாதிகளை காட்டி, சண்டை மூட்ட முடியாது..
பார்ப்பன துவேஷத்தை வைத்து, பிழைப்பு நடத்த முடியாது..
தமிழினமே என்று தம்பட்டம் அடிக்க முடியாது..
ஏனென்றால், உடன்பிறப்புகளே கூட இப்போது உஷாராகி விட்டார்கள்..
இறைவன் இல்லாது, அறிவாலயம் இல்லை என்பதை அறிந்து கொண்டார்கள்.
அதனால், நாளைய கூட்டத்திற்கு, உண்மையான, இந்து ஒருவனும் வரமாட்டான். நாளை
உண்மையான பாகவதன் பாசுரம் படிக்க மாட்டான்.
😡😡
ஒருவேளை, நாளை எவரேனும், ஒருநாள் சன்மானத்திற்காக, போனால், நாளை முதல், அந்த மானம் கெட்டவரை, எந்த நிகழ்வுக்கும், எந்த இந்துவும் அழைக்க மாட்டான்.
நினைவிருக்கட்டும்...
இந்து சொந்தங்களே...
ஒருநாள் காசுக்கு ஆசைப்பட்டால், இனி எந்த நாளும் உங்களை நாங்கள் எந்த நிகழ்வுக்கும் அழைக்க மாட்டோம்..
😡😡
நமது ஒற்றுமையை மீண்டும் காட்டுவோம்..
மறுமுறை சேர்ந்து மூக்கினை அறுப்போம்...💪🏼💪🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...