Saturday, September 1, 2018

வெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்.

வெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்

வெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்
சில நோய்களுக்கு மா மருந்தாக விளங்கிவரும் பாகற்காய் ( #Bittergourd ) கசப்பாய் இருப்பதற்கு
காரணம் இன்சுலினுக்கு இணையான மொமெசிடின் என்ற அபூர்வ மான புரதச்சத்து என்கிறார் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழத்தின் காய்கறிகள் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் ஆறுமுகம். தமிழ்நாட்டில் பரவலாகப் பயிரிடப்படும் கொடி வகை காய்கறிப் பயிர்களில் பாகற்காய் மிகமுக்கியமான ஒன்றாகும். வெப்பப் பிரதேச பயிரான பாகலின் தாயகம் இந்தியா. தமிழ்நாடு கேரளா கர்னாடகா மஹாராஷ்டிரா ஆகிய மானிலங்களில் அதிகம் பயிராகின்றன. இதன் இளம்காய்களிலும் கொடி நுனிகளிலும் இருக்கிற மருத்துவக் குணங்கலைப் பற்றி அறிந்தால் வியந்து போவோம்.
நம் உடல் தனக்கு தேவையான கசப்பு சத்தை உறிஞ்சிக்கொண்டு மற்ற தை வெளி யேற்றி விடும். பாகற்காயின் பலம் அதன் சத்து பலவீனம் பல பேருக்கு பிடிக்காத கசப்பு பாகலை மேலே இருக்கும் கரடு முரடான முள் போன்ற பகுதியைச் சீவிவிட்டு நீளவாக்கில் வெட்டி உப்புப்போட்டு பிசறி வைத்தால் கசப்பு கொஞ்சம் குறையும். வெல்லம் சர்க்கரை சேர்த்தும் சமைக்கலாம்.
கரும்பச்சை பாகலைவிட இளம்பச்சை காயில் கசப்பு கொஞ்சம் குறைச்சலாக இருக்கும். வறுத்தோ பொரித்தோ கறிகுழம்பு செய் தோ வற்றல் போட்டோ உருளை ஸ்டஃப் செய்தோ சாப்பிடலாம். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும் குணம் பாகலின் ஸ்பெஷாலிடி. சர்க்கரை வியாதிக்கு முற்றிய பாகல் நல் மருந்து. ரத்தம் சிறுநீரில் இருக்கும் சர்க்கரையின் அளவை பழுத்த பாகற்காய் குறைக்கின்றது. கபம் பித்தம் காமாலை மந்தம் போன்ற கொடிய நோய்களையும் போக்கி விடும் வல்லமை பாகலுக்கு உண்டு.
பாக்டீரியா டயபடெஸ் ரத்தப்புற்றுநோய் மலச்சிக்கல் போன்ற உபாதைகளுக்கும் மருந்தாகும். இத்தனை மருத்துவ குணங்க ள் இருப்பதால்தான் பாகல் கல்லீரலின் காவலன் என்றழைக் கப்படுகிறது. மிதி பாகல் கொம்பு பாகல் என்ற இரண்டு வகை களும் சமைக்கவும் பயிரிடவும் ஏற்றவை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...