Sunday, September 2, 2018

சர்க்கரை_நோய் #வரும்முன் #காப்பது_எப்படி?

அவரும் செக் பண்ணிட்டு
#1_mg_tablet கொடுக்கிறார்.
ஒரு வருஷம் கழிச்சு சுகர் எரிடுச்சுனு #2__mg__tabletகொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் எரிடுச்சுனு ரெண்டு #combination___tabletகொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் எரிடுச்சுனு #இன்சுலின் போட சொல்லுறார்.
அப்புறம் சுகர் கூட #BP சேர்ந்திடுச்சுனு #PRESSURE மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் #கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு
#காழை_வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல
#உயிர்_போய்டுது.
DOCTER ரை திட்டுறது இல்லை.
தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே.... போகுதேனு அவன் யோசிக்களை.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
வாரம் #300_ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை.
அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் படிக்கிறது இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகுற வரைக்கும்……
நாட்டு மருந்து என்று சொல்ல கூடிய
சித்தா, ஆயூர்வேதம்
வேலைக்கு ஆகாதுனு, ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம கூட நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
30 வயதுக்கு மேல் ஆகி விட்டாலே இன்று சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் சர்வ சாதாரணமாகி விட்டது. இன்சுலின் மாத்திரைகளும், BP மாத்திரைகளும் அன்றாட உணவின் ஒரு பகுதியாகி விட்டன. நான் சர்க்கரை நோயாளி (Sugar Patient) என்று சொல்லிக் கொள்வதில் இன்று நிறையப் பேர்
#பெருமைப்பட்டுக் #கொள்கிறார்கள்.
சர்க்கரை நோய் பெயரில் மட்டும்தான் இனிப்புள்ள ஒரு நோய், ஆனால் சர்க்கரை நோய் வந்து விட்டால் வாழ்க்கையே கசந்து விடும் அளவிற்கு உடலுக்கு அனைத்து பிரச்சினைகளையும் கொண்டு வந்து சேர்த்து விடும்.
எனவே சர்க்கரை நோயை வராமல் தற்காத்துக் கொள்வது மட்டுமே உங்களை எதிர்கால பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்…
சர்க்கரை நோய் வந்த பிறகு நமது அன்றாட பழக்க வழக்கங்களை சர்க்கரை நோய்க்கு ஏற்ப மாற்றிக் கொள்ள தயாராக இருக்கும் நாம், நோய் வருவதற்கு முன்பே மாற்றிக் கொள்ள யோசிப்பதில்லை…
இன்றைக்கு உள்ள மருத்துவம் தொடர்பான ஊடகங்களும் அது தொடர்பான செய்திகளும் கிட்டதட்ட நம்மை மூளைச்சலவை செய்து அவர்கள் சொல்ல நினைக்கின்ற செய்தியை நம் மனதில் பதிக்கிறார்கள். அது என்னவென்றால் சர்க்கரை நோயை குணப்படுத்தவே முடியாது. கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதே அந்த செய்தி.
ஒரு குதிரையை கூடாமல், குறையாமல் ஒரே வேகத்தில் செலுத்த முடியும், ஆனால் நிறுத்தவே முடியாது. என்ன ஒரு Logic. இதை நாமும் உண்மை என்று நம்பி கடைசிவரை அந்த நோயுடனேயே வாழ மனதளவில் பழக்கப் படுத்தப் படுகிறோம்.
35,40 வயதிற்கு மேல் ஆகி விட்டாலே நாம் எந்த ஒரு காரணத்திற்காகவும் மருத்துவமனைக்கு சென்றாலும் நம்மை சர்க்கரை, இரத்த பரிசோதனைகள் செய்ய வைத்து உங்களுக்கு சர்க்கரையும், இரத்த அழுத்தமும் சற்றே கூடுதலாக உள்ளன, அதற்கு இந்த இரண்டு மாத்திரைகளை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஆரம்பிக்கிறார்கள்.
இது ஒரு வகை என்றால் மற்றொரு வகை தானாக சென்று வலையில் விழுவது. அதுதான் முழு உடல் பரிசோதனை. நம் உடல் ஒன்றும் மெஷின் அல்ல, எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இயங்கிக் கொண்டிருப்பதற்கு.
நம் ஒவ்வொருவரின் உடலையும் 365 நாட்களும் சோதனை செய்தாலும், ஒவ்வொரு நாளின் முடிவுகளும் கண்டிப்பாக வெவ்வேறாகவே இருக்கும்.
நீங்கள் முழு உடல் பரிசோதனைக்கு செல்லும் ஒரு குறிப்பிட்ட ஒரு நாளன்று உங்கள் அலுவலகத்திலோ அல்லது உங்கள் வீட்டிலோ ஏதாவது பிரச்சினை என்றால் கண்டிப்பாக உங்கள் இதய துடிப்பு கூடத்தான் இருக்கும், இரத்த அழுத்தமும் அதிகமாகத்தான் இருக்கும், சர்க்கரை அளவிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.
முழு உடல் பரிசோதனை முடிவில் உங்களுக்கு இருக்கின்ற, இல்லாத நோய்களுக்கு மருந்துகள் சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக உங்களை நீங்களே நோயாளியாக மாற்றிக் கொள்வீர்கள்…
40 வயது ஆகிவிட்டாலே சர்க்கரை நோயும்,இரத்த அழுத்தமும் வருவது வேலை டென்ஷனால்தான் என்று நினைக்கிறார்கள் .
அடிப்படையில் சர்க்கரை நோய்க்கான காரணம், இரத்த அழுத்தம் உயர்வதற்கான காரணமும் வேலை டென்ஷனால் அல்ல…
நாம் நம் உடலை சரியாக கவனிக்காமல் இருப்பதே நீரிழிவு, BP நோய்களுக்கான ஆரம்ப காரணம்…
யார் யாரெல்லாம் போருக்கு போவது போல் அவசர அவசரமாக அள்ளி விழுங்கி சாப்பிட்டு, போதாதற்கு ஒரு செம்பு தண்ணீரும் குடித்து விட்டு, பசியில்லாத நிலையிலும் வயிறு நிறைய சாப்பிட்டு, அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்க்கிறார்களோ, வீட்டு வாசலில் வாகனத்தில் கிளம்பி அலுவலக வாசல் வரைக்கும் வாகனத்திலேயே சென்று, அலுவலகத்திலும் இயற்கையான காற்றோட்ட வசதி இல்லாமல் ஏர்கண்டிசனர் ரூம்களில் வேலை செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் சர்க்கரை நோயும் வருகிறது உடல் எடையும் கூடுகிறது.
மேற்கண்ட விஷயங்களை மாற்றாமல் எக்காலத்திலும் உங்களால் நீரிழிவு நோயை முழுமையாக சரி செய்ய முடியாது உடல் எடையைக் குறைக்கவும் முடியாது.
கேன்சர் நோய் வந்தால் கூட 6 மாதங்கள் மட்டும் மருந்து சாப்பிட்டாலே குணமாகி விடும், ஏன் தொழுநோய்க்கு கூட கூட்டு மருந்து சிகிச்சை என 6 மாதங்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் யாராவது 2 வருடங்கள் அல்லது
5 வருடங்கள் மருந்து சாப்பிட்டார் சர்க்கரை நோய் சரியாகி விட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
இதுவரைக்கும் கண்டிப்பாக கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள், இனிமேலும் சாத்தியமில்லை.
மேலே சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களையும் சரியாக பின்பற்றி, அத்துடன் உடலுழைப்பையும், உடற்பயிற்சியையும் சேர்த்து, அன்றாடம் சூரிய ஒளியிலும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது சென்று வந்து, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு வந்தால்……
சர்க்கரை நோய் வராமலும் தடுக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...