சிறுவர்கள் கூட இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். புகைத்தலுக்கு அருகாமையில் புகைக்காமல் இருப்பவர்களையே பாதிக்கச் செய்கிறது இந்தப் புகைத்தல்.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்?
*முடி நிறமாற்றம் அடைகிறது.
(hair color change)
(hair color change)
*மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது.
எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.
எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.
*காண்பார்வை குறைபாடுகள் ஆரம்பிக்கும். காட்ராக்ட் (cataracts) போன்றவை..
*மூக்குக்குக்கூட பாதிப்புத்தான்.. மணங்கள் நுகர்ச்சித்தன்மை குறைதல்.
*தோல் சுருங்கிப்போகும்(Wrinkle). இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல்.
*பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி(Gingivitis) போன்றவை.
*வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள். உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது, உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், துர்நாற்றம் (கெட்ட வாசனை.)
*ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை.
*இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல்.
*நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய். நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா போன்றவை.
*மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு.(Heart attack)*ஈரல் புற்று நோய் வரலாம்.
*இப்பழக்கம் வயிற்றை விட்டுவைப்பதில். நாளடைவில் அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm) போன்றவையும் ஏற்படும்.
*சிறுநீரகப் புற்று நோய்(Kidney cancer), சிறு நீர்ப் பை புற்று நோய் ஏற்படலாம்.
*எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல். இதனால் எலும்பு முறிவு(Fracture) ஏற்படும் அபாயம்.
*இனப்பெருக்கத் தொகுதி பாதிக்கப்படுதல், உதாரணமாக விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை
(Childlessness) போன்றவை.
(Childlessness) போன்றவை.
*இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்
(Blood Cancer), இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்.
(Blood Cancer), இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்.
*கால்கள் வலுவிழந்து, இரத்தம் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.
இன்னும் பல எதிர் விளைவுகளை புகைத்தல் ஏற்படுத்தும்.
இதைப் படித்த பின்னர் புகைப்பழக்கத்தை நீங்கள் நிறுத்தி விட்டால் கீழே உள்ள அறிகுறிகள் ஆரம்பமாகும்…..
*புகை பிடித்தல் நிறுத்திய ஒரு சில நாட்களுக்குள், உங்கள் சுகாதாரம் குறிப்பிடும்படியான முன்னேற்றம் அடைந்ததனை உணர்வீர்கள்.
*நுரையீரல் செயற்பாடு அதிகரித்து மற்றும் பொதுவான உடற்பயிற்சி அளவுகள் வளர்ச்சி சேர்ந்து அதிகரிக்க இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் அளவுகாரணமாக உடல் நலம் முன்னேற்றமடையும்.
*நிச்சயமாக சுவாசம் மிகவும் மேம்பட நுரையீரலில் மிகவும் அருமையாக (புகைக்கும் போது இருந்ததை விட)இயங்குகின்றன என்று கூறுவீர்கள். சளி,இருமல் இவைகள் இல்லாத ஆரோக்யமான வாழ்வு மலரும்
*மணம் மற்றும் சுவை உணர்வு மேம்படுத்திக்கொள்ள சரியானநிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும். பின்பு பசி அதிகரிக்கவும் சுவை அறிய முடியும்
*மாரடைப்பு ஆபத்து நீங்குகின்றது. பலபிரச்சினைகள், ஆபத்துக்களை குறைக்கும்.
* சகிப்பு தன்மைஅதிகரிக்கும் மற்றும் சில வாரங்களில் நன்றாகதூங்கம் கிடைக்கும்.
இதனால் புத்துணர்வு ஏற்பட்டு மன மகிழ்வுடன் வாழ்வீர்கள்.
No comments:
Post a Comment