Thursday, October 11, 2018

உண்மை தெரிஞ்சாகணும் சாமி – என கேட்கும் மக்க‍ளின் குரலுக்கு.

உண்மை தெரிஞ்சாகணும் சாமி


கிணறு வெட்டினா பூதம் புறப்புடுது… ‘ஜான் ஏறினா முழம் சறுக்குது’ போன்ற
பழமொழிகள் ‘மான் கீ பாத்’ ( Mann Ki Baat ) மோடி ( Modi )களுக்கு கச்சிதமாய் பொருந்தும்.
2016 ந‌வம்பர் ( November ) 8- இந்த நாளை எந்த இந்தியரும் மறந்திருக் க‍ வாய்ப்பில்லை. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததும் புதிய 2000 ரூபாய் 500 ரூபாய் 200 ரூபாய் நோட்டுக் களை அறிமுகப்படுத்தியதும் விடிய விடிய மக்க‍ள் ஏ.டி.எம். மையங்க ளில் ஏறி இறங்கியதும் வரமா?சாபமா? இன்றுவரை புரியவில்லையே!
கருப்புப் பணம் ஒழியும் என்றார்கள். கணக்கில் காட்டாத கருங்காலிகள் சிக்குவார் கள் என்றார்கள். பொருளாதாரம் ஓரேயதியாய் நிமிரும் என்றார்க ள். இரண்டாண்டுகளில் என்ன‍ நடந்தது? என்ன‍ நடக்கிறது? இனி என்ன‍ நடக்க‍ப் போகிறது? என்பது இன்ன‍மும் மூடி வைத்த‍ மோடி மேஜிக்காகவே இருக்கிறது.
பணமதிப்பிழப்பு ( Demonetization ) நடவடிக்கையை எடுத்த‍போது 3 இலட்சம் கோடி அளவு கருப்புப் பணம் ( Black Money ) திருப்பி வராது என்று அரசு சொன்ன‍து. ரிசர்வ் வங்கி ( Reserve Bank ) அறிவிப்புப்படி 10,750 கோடி மட்டுமே திரும்பவில்லை. அப்ப‍டி யானால் இந்தியாவில் கருப்புப் பணமே ( Black Money ) இல்லையா? அரசின் கணிப்பு தவறா? இல்லையெனில் பலநாட்களில் வழங்கப்பட் ட‍ சலுகைக்கான இடைவெளியில் வேண்டியவர்களின் கருப்புப் பணம் வெள்ளையாக்கிக்கொள்ள‍ அனுமதிக்க‍ப்பட்ட‍தா? பொருளாதார மேதைகளே ( Economist ) சட்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி
ப‌ணப் புழக்க‍த்தைக் குறைக்கவேண்டும் ரொக்க‍ப் பரிவர்த்த‍னை ( Cash Transaction ) தவிர்க்க‍ப்பட வேண்டும் இதன்மூலம் எல்லா பணபரிமாற்ற‍ மும் கணக்குக்கு வர வேண்டும் என்ற இலக்கு நிறைவேறியதா என்பத ற்கான ஆதாரமான புள்ளி விவரமும் அரசிடம் இல்லை.
வங்கிகளை தேசிய மயமாக்க‍ இந்திரா காந்தி ( Indira Gandhi )  நடவடிக்கை எடுத்த‍ போதும்.. பெரியஅளவிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மொரார்ஜி தேசாய் ( Morarji Desai ) அறிவித்த‍ போதும் எதிர்ப்புக்களும் ஏமாற்ற‍ங்களும் இருக்க‍வே செய்தன• ஊடக தாக்க‍ங்கள் கருத்து வல்லுநர்கள் அப்போது இல்லாததால் அந்த அரசுகளுக்கு விளக்க‍ம் தர வேண்டிய அவசிய மில்லாமல் போனது.
ஆனால் இன்றைய சூழல் வேறு எதிர்க்கட்சிகளைக் காட்டிலும் சாதாரண மக்க‍ள் விழிப்புணர்வுடன் உள்ள‍னர். எதையும் பிரித்து மேய்ந்து வெளிச்சத்துக் குக் கொண்டுவர ஊடகங்கள்  ( Press and Media ) கண் விழித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன• எனவே பண மதிப்பிழப்பு ( Demonetization ) நடவ டிக்கையினால் தேசத்தின் பொருளாதாரம் நிமிர்ந்ததா? சாமானியரின் வாழ்க்கை   தரம் உயர்ந்ததா ? கள்ள‍ப்பணம் கண்டுபிடிக்க‍ப்ட்ட‍தா? கருப்பு பண முதலைகள் பிடிப்பட்ட‍னவா?
உண்மை தெரிஞ்சாகணும் சாமி என கேட்கும் மக்க‍ளின் குரலுக்கு மனத்தின்குரல் மோடி சர்க்கார் ( Modi Sarkar ) உரத்துப் பதிலளிக்க‍ வேண்டியது காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...