⚡ நாம் எண்ணத்தை அலையாக அனுப்புகிறோம்
பிரபஞ்சம் பொருளாக திருப்பி கொடுக்கிறது
உதாரணமாக
நமக்கு தாகம் எடுக்கும் போது குடிக்க தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிறோம்
அது அலை வடிவத்தில் பதிந்து நமக்கு தண்ணீரை பொருளாக தருகிறது
இதேபோன்று தான்
நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும் அலை வடிவத்தில் பதிந்து பொருளாக தருகிறது
பிரபஞ்ச இருப்பில் இல்லை என்ற சொல்லுக்கு இடம் இல்லை
எதை நினைக்கிறோமோ அதை அப்படியே நமக்கு திருப்பி அனுப்பிவிடும்
ஆக எதை நினைக்கிறோமோ அதுவே நம் வாழ்வாகி விடும்
இதைத் தான் முன்னோர்கள் "எண்ணம் போல் வாழ்வு" அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்
அன்பு என்பது எதிர்பார்ப்பு இல்லாதது
அடுத்தவர்களும் பதிலுக்கு அன்பாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாதது
சந்தோஷம் என்பது விரும்பியதை சொந்தமாக்கிக் கொள்வது அல்ல
எது கிடைத்ததோ அதை அனுபவிப்பது
தோல்விக்கு பிறகு வெற்றி மட்டும் தான் வாய்ப்பு
கடலின் ஆழத்திற்கு போன பிறகு
அதற்கு கீழே போக முடியாது
மேலே மட்டும் தான் வரமுடியும்
வெற்றியை எதிர்கொள்ளாமல் இருந்தால்
தோல்வி பற்றிய பயம் இருக்காது
பயம் இல்லாத இடத்தில் பதற்றம் வராது
பதற்றம் இல்லாத இடத்தில் கவனம் சிதறல் இருக்காது
மகிழ்ச்சியுடன் செயல் படும்போது
முழுத்திறமையும் வெளிப்பட்டால் வெற்றி நிச்சயம்
மன்னிப்பு என்பது விட்டுக் கொடுப்பதோ, தோற்றுப்போவதோ அல்ல
மாறாக
மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்பதற்கு அடையாளம் அவ்வளவு தான்
உலகத்தின் மீது கோவம் வேண்டாம்
நம் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ள கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது
வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே
வாழ்க்கை பாடமாக ஏற்று நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம்
இந்த மனிதப் பிறவி ⚡
✨ ✨
No comments:
Post a Comment