Sunday, October 14, 2018

இசையே இவரின் மூச்சிக் காற்று..... இவரின் இசையே நம் மூச்சிக் காற்று.....

எங்கள் ஐயா,
நீங்கள் இசைத்தபின் அதைக் கேட்கும் வேளையில், #சில_ஒலிகளை குறிப்பிட்ட #சில_இடங்களில் கைகூப்பி வணங்கத் தோன்றுகிறது, எங்களுக்கு...
1). குறிப்பாக புல்லாங்குழல்
2). குறிப்பாக வயலின்
3). குறிப்பாக வயலின் குழு
4). குறிப்பாக கிட்டார்
5). குறிப்பாக வீணை + சிதார்
6). குறிப்பாக ஷெனாய்
7). குறிப்பாக க்ளாரினெட் + சாக்ஸாஃபோன்
8)-குறிப்பாக சந்தூர்
9). குறிப்பாக சாரங்கி
10).குறிப்பாக தபலா + டோலக் + மிருதங்கம்
11).குறிப்பாக ஜால்ரா + மராகஸ் + டாம்பரின்
- இப்படி ஒவ்வொன்றையும் விட்டுவிடாமல் '#குறிப்பாக' என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாத்தியக் கருவியும்,
சில சமயம் தனியாகவோ,
சில சமயம் மற்ற வாத்தியங்களுடன் கூட்டாகவோ சேர்ந்து,
எழுப்பும் அந்த ஓலி எங்களை மயக்குவதுடன் எங்களை நாங்களே மறந்துவிடும் மந்திர ஒலியாய் மாறிவிடுகிறது.
Image may contain: one or more people
அந்த ஒலி எங்களுக்கு ஒரு #தெய்வீக_இசையாகக் கேட்கிறது.
ஆதலால் அதனை அதிகமாய் நேசிக்கின்றோம்.
ஆதலால் அதனை வணங்கி ஆராதிக்கின்றோம்.
இப்படிக்கு,
இளையராஜா ரசிகன்.
(இதனை நிரூபிக்கும் விதமாக கீழே 'இளையராஜா இசை'யில் அமைந்த நான்கு பாடல்களை அகர வரிசையிட்டு அவற்றின் இணையதள இணைப்புகளுடன் பகிர்ந்துள்ளேன்.
மிக விரிவாக ஒவ்வொன்றின் இசையினை நான் ரசித்த விதத்தைப் பகிரலாம் என்றே முதலில் நினைத்தேன். எனது பதிவுகள் அதிக நீளமானது என்ற முத்திரை வந்துவிடவேண்டாம் என்ற பயத்தில் சுருக்கமாக என் ரசனையை வெளிப்படுத்தியுள்ளேன்.
இதோ, பாடல்களின் இணைப்புகள்:
#).
பாடல்:
"ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது"
படம் : ஊரெல்லாம் உன் பாட்டு
பாடியவர்: 1. இளையராஜா 2. ஏசுதாஸ் 3. ஸ்வர்ணலதா
(கவனிக்க:
கிட்டார், தபலா, டோலக்.
மிக மிக அருமையான மெட்டு தபலா தாளத்தை முழுமையாக ரசிக்க. ஆகவேதான், வித்தியாசமான குரல்களில் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என்பதற்காக மூன்று சிறந்த குரல்களிலும் பாடப்பட்டதை இணைத்துள்ளேன்.
-------------------------------
#).
பாடல்:
"கை வீணையை ஏந்தும் கலைவாணியே…"
படம்: வியட்னாம் காலனி
பாடியவர்: பாம்பே ஜெயஶ்ரீ
(கவனிக்க:
பாடல் மெட்டு, குரல் வளம் (இளையராஜாவின் தேர்வு) இடையிசை 1&2 வீணை + புல்லாங்குழல்)
--------------------------------
#).
பாடல்:
"பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.."
படம்: இன்று நீ நாளை நான்
பாடியவர்: S. ஜானகி
(கவனிக்க:
பேஸ் கிட்டார், க்ளாசிக்கல் கிட்டார், புல்லாங்குழல் + மிருதங்கம், சந்தூர் + கிட்டார், தபலா + மிருதங்கம், *பாடல் சரணத்தில் தபலாவும் மிருதங்கமும் 50/50 பங்கு போட்டு வாசிக்கும் அழகைக் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம்.
பெண்ணின் உணர்வுகளை மிருதங்கம் மூலம் ராஜா சார் வெளிப்படுத்துவது மிக புத்திசாலித்தனம். மிருதங்கம் தனியேகூட ஆரம்பத்தில் வாசிக்கப்படும் அதிலும் அர்த்தமுள்ளது.)
----------------------------------
#).
பாடல்:
"தாலாட்டும் பூங்காற்று நானல்லவா.."
படம்: கோபுரவாசலிலே
பாடியவர்: S. ஜானகி
(கவனிக்க:
தபலா + டோலக் + மராகஸ் + டாம்பரின், புல்லாங்குழல் + சந்தூர்,
*முக்கியமாக கவனிக்கத் தவறக்கூடாதது, பாடலின் சரணங்களில் வரும் முதல் நான்கு வரிகளுக்கு பின்பாட்டாய் (fillers) வரும் புல்லாங்குழல் இசை, 'அப்பப்பா அநியாயத்திற்கு போட்டிருக்கார்' என்று வியக்கத் தோன்றும். அதற்கடுத்த வரிகளைப் பின் தொடரும் வயலின் குழு (strings section), இவைகள் இரண்டுடனும் பயணிக்கும் அழகான அதே தபலா வகையரா தாளநடையை மாற்றும்.
ஆரம்பத்திலிருந்து தபலா + டோலக் தாளத்தைக் கவனித்துக்கொண்டு வந்தால் புரியும், பாடலின் சில இடங்களில் அவை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும், நமக்கு அந்த தொடக்க தாளநடையும், மாறுகின்ற தாளநடையும் கேட்பதற்கு அவ்வளவு இனிமை தரும்.
இப்பாடலின் இசை "போவோமா ஊர்கோலம்" பாடலை நமக்கு ஞாபகப்படுத்தும்.
ராஜா சார் தாளலயத்திலும் உங்களை அடித்துக்கொள்ள ஓர் ஆள் இன்னும் பிறக்கவில்லை.
அன்பு நண்பர்களே. நன்றிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...