ஒரு பெண் தன்னை முத்தமிட்டார்.. தவறாக நடக்க முயன்றார் என்று காலம் கடந்து சொல்வதை நிறைய மூடர்கள்.. அப்பெண்ணை மிக கேவலமாக அவரின் ட்விட்டர் ஹேண்டில்லேயே போய் சொல்லி ட்ரோல் பண்ணும் மன விகாரம் அதிர்ச்சியளிக்கிறது. எத்தனை விதமான சைக்கோக்கள்?
பலரும் மதம் தாண்டி.. ஜாதி தாண்டி அங்கு போய்.. நீ இந்த ஜாதி..ஒரு விலைமாது என்கிற ரீதியில் கமெண்ட் போடும் வக்கிரம் பிடித்த இணைய சைக்கோக்கள் நிரம்பிய சமூகத்தையா.. தமிழ் கலாச்சாரம் என்று மார்தட்டி பெருமைக்கொடியை நாட்டுகிறீர்கள்..?
பணபலம் ஆள்பலம் அரசியல்பலம் மிகவும் உடைத்த ஒரு ஆசாமி உங்கள் வீட்டு பெண்ணை.. கையை பிடித்து இழுத்தால்.. என்ன செய்வீர்கள்..? பலரும் அமைதியாய்.. இப்படி நடந்ததை வெளியில் சொல்லாமல் விடுவீர்களா?.. சிலர் மூடத்தனம் அதிகமாக.. விஜய் பட கில்லி போல் அறிவாளை தூக்குவீர்களா?. சிலர் கோர்ட் போலீஸ் போகலாம்.. ஜெயிக்க முடியாது என்று தெரிந்தால்.. சிலர் தற்கொலை கூட செய்து கொள்வதுண்டு.. சமயம் வரும்போது... இதை இவன் செய்தான் இப்படி்செய்தான் என்று சொல்வோம். அப்படியான காலம்தான் இது. இதற்கு வீட்டு பெண்களின் மீது சேற்றை வாரி இறைப்பீர்களா..? அப்படி இறைத்தால் உங்களை விட்முட்டாள் வேறு யாருமே இல்லை.. இவ்வுலகில்..
இந்த பிரச்சினையில் ஜாதி எங்கு வந்தது? மதம் எங்கு வந்தது..? விலைமாது என்று திட்டும் சில முட்டாள்களுக்கு ஒன்று தெரியுமா? விலைமாதுகளை கூட அவர்களின் விருப்பமின்றி தொடவே முடியாது.. கூடாது.. இப்படி எழுதும் உங்களை விட.. அவர்களின் தொழில் மிக மிக நேர்மையானது..
இப்படி நிஜமாக பாடகி, நடிகை, சவுண்ட் என்ஜினீயர், பத்திரிகை அலுவலகத்தில், ஐடியில் பணி புரியும் பெண்களுக்கு நடந்திருக்கலாம்.. நடந்திருக்கிறது. நீதி பரிபாலனத்தில் சந்தேகத்துக்கத்துக்கு இடமின்றி என்பது போல...இதை விசாரிக்க மேனகா காந்தி சீனியர் வக்கீல்கள்.. நிறைந்த கமிட்டியை உருவாக்கி விசாரிக்க போகிறார்கள். நியாயம் இந்த தேசத்தில் கிடைக்குமா..? என்றால் சரித்திரம் இல்லை என்கிறது.. நம்பிக்கையோ கிடைக்கலாம் என்று வாதிடுகிறது. இது ஒரு புறம்.
இன்னொரு புறம்.. இப்படி குற்றம் சுமத்தப்பட்ட ஆசாமி.. ஏன்.. defamation case.. போடக்கூடாது தான் உண்மைவாதி.. நேர்மையின் உறைவிடம் என்கிற பட்சத்தில்..? அந்த தைரியம் இல்லாது.. மையமாய் குற்றம் சாட்டுகிறார்கள் பெண்கள் என்று முகத்தை தைரியமாய் வைத்துக்கொண்டு.. முறுக்கு மீசையோடு காட்சியளிக்கும் டயமண்டுகளின் கால் மட்டும் ஏன் இப்படி நடுங்குகிறது..?
உலகம் முழுக்க இப்படியானவர்கள் மீடூவால்.. ஒத்துக்கொண்டு வழிக்கு வந்திருக்கிறார்கள்..
இப்படி குற்றம் சுமத்துபவர்கள்.. வளமான career களோடு, வளமான குரலோடு, வளமான நடிப்பு திறனோடோ, எழுத்து திறனோடோதான் இருக்கிறார்கள்.. ஆமாம்.. இவர்கள் இப்படி வலிமையான மந்திரிகளுடன், அரசியல்வாதிகளுடன், well connected பாடலாசிரியர்களுடன் எதற்கு மல்லு கட்ட வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? இந்த negative publicity காரணம் இருக்கும் வேலை கூட குறையும். அதையும் மீறி எதையோ சொல்ல வருகிறார்கள் என்பதில் உள்ளநியாயம் புரியாத அளவிற்காகவா நாம் மூடர்கள்..?
சமூகம் மாறுகிறது.. லேசாய் மூளையை reboot செய்து யோசியுங்கள்.. இப்படி இணையத்தில் ட்ரோல் செய்யும் முன்பு..
நன்றி: ப்ராமண விரோதிகள் அனைவருக்கும் நாங்கள் யாரிடமும் காழ்ப்பு கொள்ள மாட்டோம்..............
No comments:
Post a Comment