வைரமுத்துவை மட்டுமே பழிவாங்க திட்டம் என்பதை உண்மையேன கொண்டால்... பிராமணர் சங்க தலைவர் நாராயணன் பெயரை ஏன் கூற வேண்டும்.. அவ்வாறு ஒரு சாதியினர் திட்டம் போடுவதாக இருந்தால் தங்கள் சாதி சங்க தலைவரையும் .. அதே போல தங்களது சாதியில் கர்நாடக சங்கீதத்தில் உயர்ந்த நிலையிலுள்ள பலரின் பெயர்களை கொண்டுவந்திருக்க வேண்டியதில்லையே. சின்மயி பேட்டியை தற்போது பார்த்தேன் ... அவரது கண்களில் உண்மை தெரிகிறது.. தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் கேள்விகளை எதிர் கொள்வதிலேயே அவரது உண்மைதன்மை தெரிகிறது..
எந்த துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது மிக வருத்தமான விஷயம்.. மேலும் இது போன்ற விஷயங்களை தைரியமாக எடுத்துவரும் பெண்களுக்கு பெண்கள் அமைப்புகள் தைரியம் கொடுக்க வேண்டும்.. அதே போல ஆண்களும் தங்களது தங்கை மகள் போன்றவருக்கு இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்ககூடும் என்பதனை உணரவேண்டும்.. அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான ஒரு சமுக அமைப்பை உருவாக்கி தரவேண்டியது நமது கடமை ... அதற்கு இது மாதிரியான சில குப்பைகளை களைய வேண்டியது ஒவ்வொருவரின் சமுக கடமை.. நம் வீட்டை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும்..நீங்கள் சுத்தம் செய்யாவிட்டாலும் அட்லீஸ்ட்... சுத்தம் செய்ய முயல்பவர்கள் மீதாவது கலங்கம் கற்பிகாதிருங்கள்...
பாலியல் தொல்லை தருபவனை சாதி ,மதம் பார்க்க முடியாது.கமலை அதிகமாக தாக்கி பதிபவர்கள் பிராமணர்களே.
No comments:
Post a Comment