பீகார் மாநிலத்தில் ஒருவர் 30 ஆண்டுகாலம் ஒரே சமயத்தில் 3 அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் பெற்று வந்துள்ளார்.
பீகார் மாநிலம் கிருஷணகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராம். இவர் அம்மாநிலத்தில் உள்ள பொது பணித்துறை யில் உதவி செயற்பொறியாளர், பங்கா மாவட்டத்தில் நீர் மேலாண்மைத்துறையில் அரசு அதிகாரி, பீம் நகர் பகுதியில் நீர் மேலாண்மை துறை அரசு அதிகாரி என மூன்று அரசு துறையில் பணியாற்றி வந்துள்ளார். கூடவே பணி உயர்வும் பெற்று வந்துள்ளார். கடந்தசில மாதங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதிமேலாண்மை முறையை கொண்டு வந்தது. இதன்பிறகே இவருடைய லீலைகள் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் உடன் நேரில் சந்திக்குமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பான்கார்டு, ஆதார் கார்டு இவைகளை மட்டுமே கொண்டு சென்று அதிகாரிகளை சந்தித்துள்ளார். மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வர கூறி உள்ளனர்.
சுகாதரித்துக்கொண்ட சுரேஷ்ராம் தலைமைறைவானார். தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னரே அவர் எப்படி ஏமாற்றி வேலை வாங்கினார் என்பதும் மூன்று அலுவலகத்திலும் எப்படி ஒரே நேரத்தில் பணியாற்றினார் என்பதும் தெரிய வரும்.
போட்டி தேர்வுகளில் பங்கேற்றபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் ஒரே நேரத்தில் ஒருவர் மூன்று அரசு பணியில் 30 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment