அந்த மனிதருக்கு 12 கட்டத்திலும் குரு உச்சம்
ஆம், யாரும் எதுவும் பேசுங்கள் எழுதுங்கள். எம்பெருமான் இருக்கும் வரை எனக்கு சிக்கல் இல்லை, என் கடன் பணி செய்து கிடப்பதே என அவர் போக்கில் இயங்குகின்றார்
ஆம் அடித்து விளையாடுகின்றார் பழனிச்சாமி
எல்லா எதிர்ப்பையும் கடந்தாகிவிட்டது, எதிர்ப்பு நெருக்கடி என எதுவுமில்லை
அவருக்கு நெருக்கடி கொடுப்பார் யாருமில்லை. மந்தையில் முன்னால் வரும் ஆட்டுகடா போல் தனித்து வருகின்றார்.
வெறும் 30 எம்.எல்.ஏக்களை வைத்துகொண்டெல்லாம் முன்பு அதிமுகவுக்கு தண்ணி காட்டிய திமுக, இன்று 100 எம்.எல்.ஏ வரை வைத்திருந்தும் மானை விழுங்கிய மலைபாம்பு போல் கிடக்கின்றது
அதை தாண்டி சென்று அசத்துகின்றார் பழனிச்சாமி
மாநிலத்தின் பேட்டரி பேருந்து, கல்வி தொலைகாட்சி என அடித்து பின்னுகின்றார்
பழனிச்சாமி நிலைத்துவிட்டார், அவரை சாமன்யமாக எடை போட்ட திமுக இப்பொழுது திகைத்து நிற்கின்றது
நம்புகின்றீர்களோ இல்லையோ, அதிமுக முகாமை அடித்து நொறுக்கி தனக்கு எதிரியே இல்லாமல் செய்யும் காலம் திமுகவுக்கு இருந்தது
அந்த பிடியினை திமுக நழுவவிட்டது
சிக்ஸராக அடித்து துவைக்கின்றார் பழனிச்சாமி, அவருக்கு எதிர்முனையில் இருக்கும் பன்னீர் ஆடாமலே ரன் எடுக்கின்றார்
அம்பையர் மோடி இன்னும் அசத்துகின்றார்
வழக்கம் போல பீல்டிங்கில் சொதப்பி நிற்கின்றது திமுக
இங்கே பழனிச்சாமி ரன் அடிக்கும் பொழுது அதை தடுக்காமல், ஆடியன்ஸ் பக்கம் எவனுக்கோ சிப்ஸ் பாக்கெட்டை காணவில்லை , அண்டர்வியரை காணவில்லை என கத்திவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுகொள்கின்றது
இப்போதைக்கு ஆட்டத்தில் நிலைத்துவிட்டார் பழனிச்சாமி
சிலை உடைப்பை கூட நொடியில் சரி செய்து சட்டம் ஒழுங்கை நொடியில் காக்கின்றார்,தமிழகத்துக்கு இது புதிது
இனி என்னாகும்?
அடுத்த தேர்தல் எனும் ஐபிஎல் ஏலத்தில் தமிழக மக்கள் மிகுந்த விலைகொடுத்து அவரை வாங்க தயாராகிகொண்டிருக்கின்றார்கள்
இருந்து பாருங்கள், காலம் இது மிக சரியென சொல்லும்.
No comments:
Post a Comment