Saturday, August 24, 2019

கொள்ளு பேரனும்'டோல்கேட்'டில்வரி செலுத்தணும்!

நாட்டிலுள்ள, 'டோல்கேட்'கள் ஆரம்பித்த தேதியை கண்டறிந்து, எத்தனை ஆண்டுகளாக வரி வசூலிக்கப்படுகிறது என்பதை, ஆய்வு செய்ய வேண்டும். தாமாக முன் வந்து, உயர் நீதிமன்றங்களோ அல்லது உச்ச நீதிமன்றங்களோ, டோல்கேட் குறித்து, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால், சாமானிய மக்கள் காப்பாற்றப்படுவர்.டோல்கேட் துவக்கிய பின், 'இத்தனை ஆண்டுகள் வரி வசூல் செய்யப்பட்டது' என, முடித்துக் கொண்டதாக வரலாறு கிடையாது. தாத்தா, அப்பா, மகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி வரை, டோல்கேட் கட்டணம் செலுத்துவது தொடர்கிறது என்பது, வேதனையானது.டோல்கேட் வரம்புக்குள் வராத சாலைகளிலும், வரி வசூலிக்கப்பட்டு, நீதிமன்றங்கள் தலையிட்டு, அதன் வாயிலாக, நிவாரணம் வழங்கிய சம்பவங்களும் உண்டு.புதிய கார்கள், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வாங்கும் போது, அதன் மதிப்பில், 4 சதவீத தொகையை, சாலை வரிக்கென, அரசு வசூலிக்கிறது. இதன் வாயிலாக, அரசுக்கு ஆண்டுதோறும், பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.சாலை வரி வசூலிப்பதே, புதிய சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் மற்றும் தற்போதைய சாலைகளை பராமரிப்பதற்கான, செலவுகளை ஈடுகட்டத் தான்.சாலை வரியாக, பல லட்சம் கோடி ரூபாய் வசூலித்த பின்பும், நான்கு வழிச்சாலைக்கும், ஆறு வழிச்சாலைக்கும், டோல்கேட் வாயிலாக, எதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.குப்பையை அகற்றி, தெருக்களை சுத்தமாக வைப்பதற்கே, வீட்டு வரி, சொத்து வரி, காலி இட வரி என, உள்ளாட்சி அமைப்புகளால், வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது, நகராட்சிகளில், குப்பை வரி என்ற நுாதனமான வரி விதிப்பை, அரசு புகுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.சாலை வரி வசூலித்த பின், தனியாக சாலைக்கு, டோல்கேட்டில் வசூலிப்பதும் இதே போன்ற ஒரு முறை தான். அதாவது, எப்படியெல்லாம் மக்களிடம் வரி வசூலிக்கலாம் என்பதில், கைதேர்ந்த மன்னர்களாக, அரசு கட்டிலில் அமர்ந்திருப்போரின் நிலை உள்ளது.டோல்கேட்டில் அனைத்து வகை வாகனங்களும் கட்டணம் செலுத்த நிறுத்தப்படுவதால், பெட்ரோல், டீசல் செலவு அதிகமாகிறது. இதை தவிர்த்தால், ஆண்டுக்கு, கோடிக்கணக்கில் பணம் மிச்சமாகும்.டோல்கேட் அருகே, அடிக்கடி நடக்கும் சாலை விபத்துகள் குறையும்; பயண நேரம் மிச்சப்படும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...