காஷ்மீரைப் பற்றிப் பேசும் விஜய்சேதுபதி அவர்களே அதே காஷ்மீரில் அன்று யுத்தம் 1965 யுத்தம்.
இங்கே காமராஜர் நிதி திரட்டுகின்றார், அந்த திரையுலகம் கொட்டி கொடுக்கின்றது, M.G.ராமசந்திரன், சிவாஜிகணேசன் ஜெமினி கணேசன் என கொட்டி கொடுத்த பணம் ஏராளம்
கண்ணதாசன் தன் இரத்த திலகம் படத்தின் வருமானம் முழுக்க தேசத்துக்கு என சொல்லியிருந்தார்
சாவித்திரி கொடுத்த நகை மட்டும் 80 சவரண், அது போதாதென தன் மகளின் கழுத்தில் இருந்த நகையினையும் கொடுத்தார்
பஞ்சாப் எல்லையில் இந்திய வீரர்களை ஊக்கபடுத்த சென்ற திரைநடிகர் குழுவில் பத்மினி இருந்தார், அந்த பங்காரா நடனம் பஞ்சாபியரிடையே அவருக்கு தனி மரியாதையினை கொடுத்தது
வயதில் மிக இளையவரான ஜெயலலிதா அந்த போர்முனைக்கு சென்று வீரர்களோடு கைகுலுக்கி வந்தது அன்றே அவரின் நாட்டுபற்றை பாட்டிற்று
அந்த கலை உலகம் அப்படி இருந்திருக்கின்றது, எவ்வளவு தேச பற்று? எவ்வளவு ஆர்வம்?
இவ்வளவுக்கும் அன்று அந்த பெரியார் என்பவர் உயிரோடு இருந்தார், அவரை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் சிலிர்த்து நின்றது தமிழகம்
அவரை யார் சட்டை செய்தார்கள்? அந்த ஈவேராவும் இரு காஷ்மீரிய யுத்தத்தின்பொழுது வாயினை பொத்திகொண்டுதான் இருக்க வேண்டி இருந்தது
இன்று ஏதோ அவன் அன்று அப்படி சொன்னான் இப்படி சொன்னான் என கிளம்புகின்றன சில்வண்டுகள், இதை அனுமதிக்க முடியாது
கையில் இருந்ததை எல்லாம் அள்ளி கொடுத்துவிட்டு, தேச எல்லை வரை சென்ற அந்த கலை உலகத்தார் எங்கே?
மொத்த சுயநலத்தின் உருவமாய் இப்பொழுது இருக்கும் இந்த விஜய் சேதுபதி மாதிரியான குழப்பவாதிகள் தேசவிரோதிகள் எங்கே?
அந்த கலையுலக தியாகிகளை நாட்டுபற்றாளர்களை வணங்கி கொண்டே இந்த திருட்டு நடிகர்களை தேசவிரோத பிரிவினைவாதிகளை கண்டு நாணத்தால் தலைகுனிகின்றோம்
மக்கள் அபிமானம் பெற்றுவிட்டவர்களுக்கு நாட்டு நலனும் தேசத்தின் மேலான அக்கறையும் அதிகம் தேவை
அன்றைய நடிகர்கள் அதில் மிக சரியாக இருந்தார்கள், இன்றுள்ளவர்கள் சட்டபடி உள்ளே தள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பதுதான் மாபெரும் சோகம், கலைதுறை நாட்டுபற்றின் வீழ்ச்சி இது
அன்று நாடக கம்பெனிகள் சுதந்திர போராட்ட காலத்தில் எவ்வளவு தேசிய நாடகங்களை நடத்தின
நாட்டுபற்றுமிக்க எவ்வளவு படங்கள் M.G.ராமசந்திரன் காலம் வரை வந்தன, ஏன் விஜயகாந்த் கூட காஷ்மீர் பற்றி எவ்வளவு நடித்திருந்தார்
அவர்கள் நடுவில் களையாக வந்து நிற்கும் விஜய் சேதுபதி எனும் பிரிவினைவாதியினை கண்டு நாணத்தால் தலை குனிகின்றது திரையுலகம் மற்றும் தமிழகம்
இந்த இடத்தில் தேசியவாதியாக நிற்கும் ரஜினியும் குஷ்புவும் வாழ்த்துகுரியவர்கள், மிக மிக தேர்ந்த பக்குவபட்ட பேச்சும் நிதானமும் அவர்களிடம் இருக்கின்றது
பாகிஸ்தான் ஆதரவு பெரியார் இருந்த காலத்திலே அவரை புறந்தள்ளி இந்தியா பக்கம் நின்ற திரையுலகம் இது, அதில் இருந்து கொண்டு இந்த விஜய்சேதுபதி ஏதோ புதிதாக பேசிகொண்டிருப்பது பைத்தியகாரதனமும் சிறுபிள்ளைதனமும் கொஞ்சமும் பக்குவபடாத அரைவேக்காட்டு தனமுமாகும்
மிஸ்டர் விஜய் சேதுபதி, உமக்கு விசிலடிக்கும் சில சில்லறைகளை மட்டும் நீர் பார்த்திருக்கலாம், அதை விட பன்டங்கு பெரும் படை இத்தேசத்திற்காக உண்டு, அதை உம்மை சும்மா விடாது
இனியும் உளறிகொண்டிருந்தீர் என்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதைமட்டும் தேசபற்றாளர்கள் சொல்லிகொள்கின்றோம்
ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்.
No comments:
Post a Comment