திருச்சி என்றாலே மலைக்கோட்டைதான் முதலில் நினைவுக்கு வரும் .அதேபோல் பல ஆண்டுகளாக ரயில்வேயில் திருச்சியிலிருந்து - சென்னைக்கு '' ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் '' எனும் பயணிகள் விரைவு வண்டி திருச்சியில் கிளம்பி மறுநாள் காலை சென்னை சென்றடையும் -அதேபோல் சென்னையிலிருந்து அதே நேரத்தில் கிளம்பும் ரயில் திருச்சி வந்து சேரும்.
இந்த '' ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் '' ரயில் திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும்
மீட்டர் கேஜ் எனப்படும் குறுகிய இருப்புப்பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட சமயத்தில் இதே ரயில் தஞ்சை வழியாக இயக்கப்பட்டு சென்னைக்கு சென்று வந்தது.
அதனைத் தொடர்ந்து , பல்லவன் எக்ஸ்பிரஸ் - வைகை எக்ஸ்பிரஸ் என அதிவேக ரயில் வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன .
இந்த ரயில்கள் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நிற்காது . ஸ்ரீரங்கத்தில்மட்டுமே நிற்கும் .அப்படி அந்த ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நிறுத்தப்பட்டபோது நடு இருப்புப்பாதையில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறங்கிச்செல்ல வழி செய்யப்பட்டிருந்தது . பயணிகள் ரயில் பெட்டியிலிருந்து இறங்கி முதலாவது இருப்புப்பாதையைக் கடந்துதான் வெளியே செல்ல பிளாட்பாரத்திற்கு வர முடியும்.
பயணிகள் தாமாக இருப்புப் பாதையைக் கடந்தால் டிரஸ் பாஸ் என்று சொல்லி குற்றமாகக் கருதி அபராதம் விதிப்பார்கள் ரயில்வே துறையில் .ஆனால் ரயில்வே நிர்வாகமே இப்படி டிரஸ் பாஸ் அனுமதிக்கும்போது அபராதம் கிடையாது. இதெல்லாம் நடந்து முடிந்தவைகள்.
ஏன் டவுன் ரயில் நிலையத்தில்ரயில்கள் நிற்காது என்பதற்கு ரயில்வே நிர்வாகம் ஏதேதோ காரணங்கள் கூறினாலும் - டவுன் ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டுமென்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம்.
மலைக்கோட்டை மாநகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டைக்கு வெகு அருகில் அமைந்துள்ள டவுன் ரயில்வே ஸ்டேஷனில் மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு ஏன் நின்று செல்லக்கூடாது.?
டவுன் ரயில்வே ஸ்டேஷனில் பலதரப்பட்ட பயணிகள் குறிப்பாக மலைக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் - வயோதிகர்கள் - சுற்றுலாப்பயணிகள் மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் மற்றும்அவ்வழியே செல்லும் இதர ரயில்களில் பலவகை பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர்.
டவுன் ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து வகை பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டால் ரயில் பயணிகளுக்கு டவுன் ஸ்டேஷனுக்கு மிக அருகிலிருக்கும் காவிரியில் புனித நீராடி - திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கும் - கிறிஸ்தவர்களின் தேவாலயத்திற்கும் - நத்தர்ஸா பள்ளிவாசல் எனக்குறிப்பிடப்படும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தளத்திற்கும் - கால்நடையாகவே திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சென்றுவர வசதியாக இருக்கும் .
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மட்டுமே பயணிகள் ரயில் நிறுத்தப்படும்போது அங்கிருந்து நகரின் மையப் பகுதிக்கு வர வேண்டிய ரயில் பயணிகள் வீண் செலவு செய்து வாடகை வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் வந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகின்றது . இதனால் ,மகளிர் குழந்தைகள் மூத்த குடிமக்கள் ஆகியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பயணிகளுக்காகவும் பயணிகளின் வசதிக்காகவும் தான் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றது என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை. .
எனவே , பயணிகளின்வசதியினைக் கருத்தில் கொண்டு ரயில்கள் அனைத்தும் திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டு மென பலதரப்பட்ட மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் .
ரயில்வே நிர்வாகம் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்குமென நம்பப்படுகின்றது. எதிர்பார்க்கப் படுகின்றது.
No comments:
Post a Comment