தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் பிளம்ஸ் அதிகம் பயிராகிறது.
சர்வதேச அளவில் பிளம்சை அதிகம் விளைவிக்கும் பாராக சீனா முதல் இடம் பெறுகிறது.
அமெரிக்கா, செர்பியா, ரோமானியா போன்ற நாடுகளைவிட சீனாவில் இதன் உற்பத்தி அதிகம். மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள், சுவையிலும் வித்தியாசம் என பலவிதமாக காணப்படும் பிளம்சில் மொத்தம் 2 ஆயிரம் வகை இருக்கின்றன.
அபரிமிதமான வைட்டமின்களைக் கொண்டது பிளம்ஸ்.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.
பிளம்ஸ் சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது .
கொழுப்புச்சத்து குறைந்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
வைட்டமின் சி சத்து செறிந்த பழம் இது. எனவே, ஆரோக்கியமாக உடலை பராமரிப்பதை போலவே அழகைப் பராமரிக்க உதவும் சரும நல மருத்துவராகவும் பிளம்ஸ் செயல்படுகிறது.
குறிப்பாக சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும், கருப்பாக ஏற்பட்டிருக்கும் சின்னச்சின்ன திட்டுக்களையும் சரி செய்கிறது.
இதனாலேயே பல்வேறு சரும நல பொருட்கள் தயாரிப்புகளில் பிளம்ஸ் பழத்தின் எசன்சை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக பிளம்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காண முடியும் என சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளதாக கூறுகிறார்கள்.
நோய்த்தொற்று மற்றும் நோய் அழற்சி ஆகியவற்றில் இருந்து நம்மைக் காக்கும் வேலையை பிளம்சில் செறிந்திருக்கும் வைட்டமின் சி செய்கிறது.
நார்ச்சத்து நிறைந்த கனி என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள், குடல் பிரச்சினை, உபாதைகள் மற்றும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு பிளம்ஸ் பிரச்சினைகள் தீர்க்கும் அருமருந்து.
வைட்டமின்கள் நிறைந்த பழம் என்பதைப் போலவே பொட்டாசியம், ப்ளூரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் தாமிரச்சத்துகள் கொண்டதாகவும் விளங்குகிறது.
உடலில் காயங்கள் ஏற்படும் போது அவற்றை எதிர்கொண்டு, விரைவில் ஆற்றும் மருந்தாக பிளம்சில் உள்ள மருத்துவ குணம் அமைகிறது.
இரும்புச்சத்து நிறைந்திருப்பதும், சீரான ரத்த ஓட்டமும் கூந்தல் வளர்ச்சிக்கான அடிப்படை மருத்துவக் காரணிகள். எனவே, பிளம்ஸ் கூந்தல் பிரச்சினைகளை நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது. முடி உதிர்வதையும் தடுக்கிறது.
பிளம்ஸ் எடுத்துக்கொள்பவர்களுக்கு முக்கியமாக இதில் உள்ள மினரல் சத்துகள், அதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த அணுக்களுக்கு துணையாக இருப்பதுடன் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பணியையும் இப்பழம் செய்கிறது.
ஏராளமான வைட்டமின்களும், மினரல்களும் இருப்பதால் கர்ப்பிணிகளின் நலன் காக்கும் பழம் இது. கர்ப்பிணியின் ஆரோக்கியம் காப்பதைப் போலவே கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் பிளம்ஸ் உதவுகிறது.
‘புதிய வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பிளம்ஸ் சாப்பிடுங்கள்‘ என்கிறது ஜப்பானின் !
பிளம்ஸ் பழத்தில் இருக்கும் ஆக்சலேட், சிறுநீரக் கோளாறு உடையவர்களுக்கும், பித்தப்பையில் பிரச்சினை கொண்டவர்களுக்கும் அவர்களுடைய நோயை தீவிரமாக்கும்.
அதே போல் சிலருக்கு அலர்ஜியையும் பிளம்ஸ் உண்டாக்கும். எனவே, இவர்கள் பிளம்சைத் தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment