தமிழ் திரை உலகம் இன்று கோமா நிலைக்கு வந்து விட்டது. வானத்துக்கும் பூமிக்கும் குதித்து லைகா நிறுவனத்தை எதிர்த்தவர்கள் இந்த தமிழ் திரை உலக போராளிகள் ஒரு கால கட்டத்தில்! அதிலும் இவர்கள் அள்ளி வீசிய குற்றச்சாட்டு, லைகா தயாரிப்பாளர் மகிந்த ராஜபக்ச அவர்களின் பினாமி என்பது தான். சீமான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு செல் போன் கம்பெனியின் விளம்பரத்தில் வந்ததற்கு என்று நினைக்கிறேன், அதற்கே வழக்கம் போல் எதோ அறுந்த பூனை போல் குதித்தார். ஆனால் இன்று தமிழ் திரை உலகம் நிலை என்ன? இந்த லைகா நிறுவனம் இல்லை எனில் பல நடிகர்கள், இயக்குனர்கள் பிழைக்க வழியில்லாமல் இருந்திருப்பார்கள். இன்று வெளி வரும் படமாக இருக்கட்டும், பூஜை போடப்படும் படமாக இருக்கட்டும், பத்தில் எட்டு இந்த நிறுவனம் மட்டும் தான்!
நடிகர்கள் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தாலும் இரண்டு படங்கள் தோல்வி அடைந்தால் அவர்கள் முதலும் மோசமாவதொடு பிரதான நடிப்பு தொழிலுக்கும் பங்கம் வந்து விடுகிறது. இதற்கு மிக சிறந்த உதாரணம் சிவ கார்த்திகேயன்.. அடுத்து தனுஷ்.. காலா தோல்வி கோடிகளில்.. தமிழ் திரை உலகம் எந்த கார்ப்பரேட் நிறுவனங்களை பற்றி மிகவும் மோசமான நிலையில் பொய் பிரச்சாரம் செய்கிறதோ, அதே கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்கிறது.. இது எல்லாவற்றையும் விட என்று தமிழ் தேசியம் அதிலும் குறிப்பாக தலித்திய கருத்துக்கள் சினிமாவில் புக ஆரம்பித்து விட்டதோ அன்றிலிருந்து படுத்து விட்டது. நடிகர் விவேக் வடிவேலுவை விட Multi faceted personality. அவரால் எல்லா ரோல்களிலும் பரிமளிக்க முடியும். ஆனால் அவர் comedy என்பதை விடுத்து பிரச்சார நெடியில் இறங்கி தன்னுடைய இருப்பை இழந்தார்.
ஒரு காலத்தில் நேஷனல் film development corporation என்று ஒன்று இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. அவரகளும் படம் எடுத்தார்கள். நக்சல் பற்றி, பண்ணையாளர்கள் பற்றி, அரசு நிர்வாகம் பற்றி, போலீஸ் அத்து மீறல்கள் பற்றி, சாதிகள் பற்றி.. இவர்கள் நுழையாத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த படங்கள் அன்று parallel cinema என்று பலரால் பெரும் வரவேற்பை பெற்றது. நஸ்ருதீன் ஷா, ஓம்புரி, ஸ்மிதா படில், ஷபானா ஆஸ்மி, Farooq sheikh, Alok Nath, தீப்தி நாவல், மற்றும் பல வங்காள இயக்குனர்கள், கோவிந்த் நிஹ்லானி, அமொல் பலெக்கர்.. பக்கம் போதாது.. அந்த அளவில் மிக சிறந்த திறமையாளர்கள் இந்திய திரை உலகத்துக்கு அடையாளம் காண்பிக்க பட்டனர். அவர்களது படங்கள் எல்லாம் அன்றைய சமூக அவலத்தை பிரதிபலித்தது. பலர் அதை ஆதரித்தனர். காரணம் அந்த படங்கள் எல்லாம் ஒரு positive influence ஐ மக்களிடம் கொண்டு சேர்த்தன. பிரிவினைவாதம் பேசவில்லை. இன வெறியை போதிக்கவில்லை.. ஒரு விஷயம், இப்படி ஒரு திரை உலக புரட்சி நடந்து கொண்டு இருந்த போது தமிழ் திரை உலகம் வெறும் மசாலா படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு இருந்தது. அதை நான் தவறு என்று சொல்லவில்லை. அது தொழில். பாலசந்தர் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய directors கொஞ்சம் semi off beat film எடுத்தனர்.
இவர்கள் எல்லாம் வட நாட்டை எதோ ஆபிரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு வளர்ச்சி இல்லாத நாடு போல் நக்கல் அடித்தும், இழித்தும்,பழித்தும் பேசி வயிற்றை வளர்க்கின்றனர். உண்மையில் எந்த துறையாக இருந்தாலும் அவர்களின் பங்களிப்பு இந்த நாட்டுக்கு அளப்பரிய ஒன்று! அவர்கள் காலம் காலமாக அனுபவித்த இன்னல்கள் சொல்லி மாளாது..அந்த தும்பம் எல்லாம் இங்கே இவர்கள் பட்டு இருந்தால் என்றோ தங்களது அடையாளத்தை தொலைத்து இருப்பார்கள்.
இன்று வாய் கிழிய பேசும் இந்த தமிழ் நாட்டு நடிகர்கள் எந்த விதத்திலும் தமிழ் சினிமாவின் தரத்தை மேம்படுத்த எந்த ஒரு முயற்சியையும் செய்தது இல்லை. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை அடுத்து, வெளி நாட்டு கம்பெனிகள் பக்கம் தங்களது பார்வையை திருப்பி இருக்கின்றனர். ஆனால் அந்த நிறுவனங்கள் எல்லாம் மிகவும் தெளிவாக செயல்பாடு கொண்டவை. போட்ட காசு எடுக்க முடியாவிட்டால் தின்னையை காலி செய்து கொண்டு போய்விடுவார்கள்.
லைகா நிறுவனம் இன்னும் இரண்டு மூன்று தோல்வியை சந்தித்தால் அதுவும் இடத்தை காலி செய்து விட்டு போய்விடும். இனி ஈரோஸ் போன்ற அனில் அம்பானி நிறுவனமும் இங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஸ்ட்ரீமிங் வீடியோ app வந்த காரணத்தால் திரை அரங்கு பக்கம் செல்வதும் குறைந்து விட்டது. நிலை இப்படி இருக்க லயன் தி ஜங்கிள் கிங் படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் போய் கொண்டு இருக்கிறது. Avengers படமும் இப்படி தான்.
சினிமா என்கிற பொழுது போக்கு சாதனைத்தை அரசியலுக்கு, தங்களது வறட்டு போன சித்தாந்தம் மற்றும் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் திருவோடு தான் ஏந்த வேண்டும். அந்த நிலை அதி விரைவில் தமிழ் திரை போராளிகளால் ஏற்படும். Mob culture, அதாவது கூட்டம் கூடுதல், ஆர்ப்பரித்தல் இவை இரண்டும் ஒழிந்தாலே போதும், தமிழ் திரை உலகம் ஆரோக்கியம் பெறும்.
No comments:
Post a Comment