"நேரத்தின் மீது அக்கறை கொண்டோர்
அடைவர் சிறந்த நலனை,
அடைவர் சிறந்த நலனை,
வாரத்தில் ஒருமுறை சர்க்கரை வள்ளியை உண்போர் அடைவர் நல்ல பலனை"
பொதுவாக நாம் அனைவரும் கேள்வி பட்ட ஒன்று என்னவென்றால் கிழங்கு வகைகளை சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்ற ஒன்று. ஆம் அது உண்மை தான், ஒரு சில கிழங்கு வகைகளை நீங்கள் உண்டால் உங்களின் உடல் எடை அதிகரிக்கும்.
ஆயினும் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலிற்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.
*சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள சத்துக்கள்*
இப்பொழுது நாம் சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள சத்துக்களை பற்றி காண்போம்.இதில் வைட்டமின் எ, பி,சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
*கொழுப்பு இல்லை*
நாம் பொதுவாக கேள்விப்பட்ட கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.
*உடல் எடையினை குறைக்க உதவும்*
சர்க்கரை வள்ளி கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது.
*மலச்சிக்கலை தடுக்கும்*
மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரை வள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
*எப்போதும் இளமையாக இருக்க உதவும்*
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரீ ராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். மேலும் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும். எனேவே வாரத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை வள்ளி கிழங்கினை உண்டு வாருங்கள்.
*நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்*
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். மேலும் உங்களை ஆரோக்கியமாக வைக்க வழிவகுக்கும். எனவே கிடைக்கும் பொழுது சர்க்கரை வள்ளி கிழங்கினை வாங்கி உண்ணுங்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment