அதை அருந்துவதால் உடலுக்கு நன்மையா தீமையா?
மது அருந்துபவர்களுக்கு நன்மை தீமை என பகுத்து அறியக்கூடிய பகுத்தறிவு உள்ளதா? இல்லையா?
இலவச மது திட்டம் ஒன்றை உருவாக்கி அரசு மக்களுக்காக இலவசமாக மதுவை கொடுக்கப்படுகிறதா?
பூரண மதுவிலக்கு வேண்டி போராட்டம் செய்ய நினைப்பவர்கள் . அரசை மட்டும் குறை சொல்வது ஏன்?
கேள்விகள் கேட்கப்படும் போது தான் தீர்வு என்ற ஞானம் பிறக்கும். அதனால் எனது பதிவு .
(1) அரசியலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களும் மது தொழிற்சாலை நடத்தவோ. (அல்லது) அதை சார்ந்த தொழில் செய்யக்கூடாது என்ற அரசாணை இயற்ற முடியுமா?
(2) மது அருந்த கொடுக்கப்பட்ட இடவசதியை ரத்து செய்ய முடியுமா?
(3) மதுக்கடைகளை மாலை 5 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதி தர முடியுமா?
(4) மது மனித இனத்திற்கே கேடு விளைவிக்கும். அந்த மதுவின் மறைமுக வரியை உயர்த்த முடியுமா?
(5) பொது இடங்களில் மது அருந்தினால் அவர்களுக்கு 12 நாட்கள் சிறை தண்டனை கொடுக்க சட்டம் இயற்ற முடியுமா?
இந்த வழிமுறையை வழிநடத்த முடியும் என்றாள். பூரண மதுவிலக்கு தானாக உருவாகும்.
இந்த வழிமுறையை கொண்டு வர எவரேனும் போராட்டம் நடத்துவார்கள்? (அல்லது) நீதிமன்றத்தின் உதவியை நாடுவார்களா?
இந்த வழிமுறையை கொண்டு வர எவரேனும் போராட்டம் நடத்துவார்கள்? (அல்லது) நீதிமன்றத்தின் உதவியை நாடுவார்களா?
No comments:
Post a Comment