Wednesday, August 28, 2019

கண்டிப்பாக மாற்றம் தேவை.மாரிதாஸ் தலைவர் ஆனால் சிறப்பாக இருக்கும்.

எமர்ஜென்சியைக் கொண்டு வந்து நாடு முழுவதையும் கட்டுப்படுத்திய இந்திரா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் மக்கள் அதற்குப் பிறகும் கூட ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள் -
இந்திராவை சீக்கியர்கள் கொன்று விட்டார்கள் என்ற பிறகு ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்ட பஞ்சாபில் இன்று நடப்பது அதே காங்கிரஸ் ஆட்சி -
1991-ல் ராஜீவ் தமிழக மண்ணில் கொல்லப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதும் தமிழர்கள் காங்கிரஸாரால் கொல்லப்பட்டார்கள் அதே ஆண்டு நடந்த தேர்தலில் இதே தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுகிறது -
அதற்குப் பிறகு 2009-ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு காங்கிரஸும், திமுகவும் காரணம் என்று கூறப்பட்டாலும் இன்று வரை இங்கே தி.மு.க, காங்கிரஸுக்கு ஓட்டளிக்கின்றனர் -
இரு கட்சிகளுக்கும் MLA க்களை வழங்கி வருகின்றனர் நம் மக்கள் -
ஆக, இங்கே மக்களுக்கு இது போன்ற படுகொலைகளை விட தான் சார்ந்த கட்சி மற்றும் தலைவர்கள் முக்கியம் என பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்களா?
அல்லது எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்க்கிறார்களா?
அல்லது, மறதி என்னும் மாபெரும் வியாதிதான் இவைகளுக்குக் காரணமா?
எதையும் மறக்கச் செய்யும் சக்தி காலத்துக்கு உண்டு என்று சொல்வார்கள் -
யாராவது நமது நெருங்கியவர்கள் இறந்து விட்டால் கூட மூன்றாவது நாளிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் மனது மனித மனது என்று சொல்வார்கள் -
அதனால் தான் இங்கே அ.தி.மு.கவும், தி.மு.கவும் திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வர முடிகிறது -
MGR மறைந்தபின் ஏற்பட்ட வெற்றிடத்தை ஜெயலலிதா நிரப்பினார் -
சென்ற வருடம் வரை ஜெயலலிதா , கருணாநிதி என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த தமிழக அரசியல் -
இன்று இருவரும் மறைந்துவிட்ட நிலையில் -
உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது -
பஞ்சாபில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற அம்ரீந்தர் சிங் என்ற தலைவன்தான் காரணம் -
அது போல இன்று இங்கே தமிழகம் ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது -
அவர் யார் என்பது இந்த நிமிடம் வரை தெளிவாகவில்லை -
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அ.தி.மு.க பிளவுபட்டுவிட்டது, பலமிழந்து விட்டது -
நல்ல முதல்வராக பழனிச்சாமி இருந்தாலும் இன்னும் தன்னை தலைவனாக தரம் உயர்த்திக் கொள்ளவில்லை -
நல்ல கட்டமைப்புடன் இரண்டாவது பெரிய கட்சியான தி.மு.க வின் தற்போதைய செயல் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய சிறு பிள்ளைத்தனமான செயல்பாடுகள், பேச்சுக்களால் இருக்கும் தொண்டர்களையும் இழந்து வருகிறார் -
ஆனாலும் தேர்தல்களில் வென்று வருகிறார் அதற்குக் காரணம் சாத்தியமில்லாத இலவச அறிவிப்புகள்
அடுத்தடுத்த போட்டியில் ரஜினி, கமல்,TTV தினகரன் போன்றோர் வருகிறார்கள் -
(இதில் இந்த TTV - யை மட்டும் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது -
234 தொகுதிகளுக்கும் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தே வெற்றிடத்தை நிரப்பி விடுவார் -)
இவர்களோடு இன்னும் பல ரிடையர்ட்டு ஆன இயக்குனர்களும், காமெடி நடிகர்களும் முதல்வர் போட்டியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்கள் -
சர்வநிச்சயமாக தேர்தல் என்று வரும் வரை மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியப் போவதில்லை -
ஆனால்,
என்னுடைய வருத்தமெல்லாம் இது போன்ற தங்கமான தருணத்தை இங்கே இருக்கின்ற சத்தியமான தேச பக்தர்களை மட்டுமே கொண்டிருக்கக் கூடிய பாரதீய ஜனதா கட்சி தவறவிடுகிறதே என்பது தான் -
மேலே, மோடி தலைமையிலான நல்லாட்சி- அடுத்தடுத்த மாநிலங்களில் கூட்டாச்சி மோடியும், அமித்ஷாவும் எப்படியும் தமிழகத்திலும் தாமரையை மலரச் செய்து விடுவார்கள் என்று நாமும் மாண்புமிகு மந்திரியாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போல் தெரிகிறது -
எப்படிப்பட்ட செப்படி வித்தைக்காரன் என்றாலும் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் -
இங்கு உடணடித் தேவை ஒரு நல்ல தலைமைதான்- அவன் எந்தக் கட்சியில் இருந்தாலும் சரி அவர் பின்னே பலர் தொடர்வார்கள் -
நேற்று முளைத்த காளான் தினகரன் கூட ஊர் ஊராகச் சென்று உறுப்பினர் சேர்க்கை செய்து வருகிறார் -
தமிழக பா.ஜ.க தலைமை தூங்கி வழிகிறது -
எனக்குத் தெரிந்து தமிழக பா.ஜ.கவிற்காக உழைப்பவர்கள் சில முன்ணனித்தலைவர்கள் ஊடக விவாதங்களில் சிரமப்பட்டு போராடிவருகிறார்கள் -
பல சமூக வலைத்தள போராளிகள் -
தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் -
உண்மையில் இவர்களில் 90% பேருக்கு உறுப்பினர் அட்டை கூட இன்று வரை கிடையாது -
அடுத்ததாக மாரிதாஸ் தனியொரு மனிதனாக மோடியை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார் -
தயவு செய்து டாக்டர் அக்கா -
மாரிதாஸைக் கூட தலைமைப் பொரறுப்பில் விட்டு விட்டு விலகிச் செல்லுங்கள் -
தமிழகம் எதிர்பார்ப்பது நல்ல சிந்திக்கக் கூடிய செயல்படக்கூடிய தலைமையைத்தான் -
வெற்றிடத்தில் ஒளி, ஒலி இரண்டுமே ஊடுறுவாது -
ஒரு ஊடகம் தேவை-
தேசப்பணியில் என்றும் -

🕉🕉🕉🕉🕉🕉🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...