சரியாக மோடி ஜீ அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயம் அது. அதற்கு முன் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் சோ அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு அகில இந்திய பாஜக தலைவர்கள் அவர்களின் ஈகோவை ஒதுக்கி விட்டு கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலம் மீதான அக்கறையுடன் ஜூனியராக இருந்தாலும் செயல்வீரர் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதற்கு முன் மோடி அவர்கள் குஜராத்தில் முதல்வர் ஆவதற்கு முன் கேசுபாய் பட்டேல் அவர்களின் முழு ஆளுமையில் இருந்தது. அதன்பின் ஒருகட்டத்தில் மோடி அவர்கள் முதல்வரான பின் அனைவருக்கும் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது.முக்கியமாக இதுநாள் வரை காங்கிரஸ் மற்றும் பிஜேபி க்கு எதிர்கருத்தை உடைய கட்சிகள் செய்து வந்திருக்கும் அரசியல் என்பது வேறு. மோடி அவர்கள் அரசியல் செயல்பாடுகள் என்பது வேறு.
பிரதமர் வேட்பாளராக அறிமுகப்படுத்திய நேரத்தில் நிதிஷ்குமார், சிவசேனா போன்றவர்கள் வெளிப்படையாக எதிர்த்த குறிப்பிடத்தக்க நபர்களில் சிலர்.
பின்னர் பிரதமராக வாகை சூடியபின் அவரின் செயல்பாடுகளால் அனைவரையும் வாயடைக்க வைத்தார். அதன்பின் மற்ற அரசியல் தலைவர்களும் கட்சிகளுக்கும் ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிந்தது.
1.அவரை செயல்பாடுகளை விமர்சிக்க அவரின் செயல்பாடுகளை செய்ய அவரை விட நாம் ஒருபடி அதிகம் உழைக்க வேண்டும்.
2.அவரை விட சிறந்த தேசபக்தனாக இருக்க வேண்டும்.
3.அவரை விட நேர்மையாளனாக இருக்க வேண்டும்.
4.அவரை விட சிறந்த தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
5.அவரை விட பன்முகத்தன்மையாளனாக அதே சமயத்தில் மக்களை ஒருங்கிணைப்பவராக இருக்க வேண்டும்.

இதில் உள்ள நடைமுறை பிரச்சனை என்னவென்றால் இவ்வளவு நாள் மற்ற கட்சிகளின் அரசியல் ஒரு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சேர்ந்த கூட்டம் அல்லவே...... ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு சுயநலம் அல்லது தேவை காரணமாக இருந்து வந்துள்ளான்.......
இன்று வந்து நீ திருந்தி விடு அல்லது திருத்தப்படுவாய் என்று காங்கிரஸ் அல்லது திமுக தலைமை சொன்னால் கேட்டு விடுவானா?
உண்மையில் அது மாதிரி இந்த கட்சிகள் கேட்க ஆரம்பித்தால் கட்சிக்காரனே டாடா காட்டி சென்று விடுவான் என்பது தான் நிதர்சனமான உண்மை.
மோடி அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்புகளிலும் பாருங்கள். உள்நோக்கம் கொண்ட பிரிவினைவாதம் மனதில் உடைய கேள்விகளுக்கான பதில்கள் ஒவ்வொன்றும் தேசத்தின் ஒற்றுமை, மக்களின் வளர்ச்சி, பாரம்பரியத்தின் மீதான நம்பிக்கை என்ற புள்ளியில் தான் வந்து முடியும்.
அவை அந்த மக்களுக்கு புரிந்ததால்தான் இந்தியாவில் 350 க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் ஒரு முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இரண்டாம் முறை காங்கிரஸ், அதிமுக அல்லது வேறு எந்த கட்சிகளும் அறுதிபெரும்பான்மையுடன் இதுபோன்ற வெற்றியை பெற இயலவில்லை.காரணம் ஒன்று தான். அதுதான் பிஜேபி என்ற கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு.
ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி இறந்தவுடன் இன்று வரை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.அன்றிலிந்து இன்று வரை யார் தகுதியான தலைவர் என்று அறிவார்ந்த தமிழன் திரையில் தேடிக்கொண்டு இருக்கிறான்.

ஆனால் தேசிய அரசியலில் பாருங்கள், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லீ, மனோகர் பாரிக்கர், அனந்தகுமார் என்று அடுத்தடுத்து தன் தலைவர்களை பறிகொடுத்திருக்கிறது. ஆனால் நிலைகுலையவில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக கட்சியை உரிமை கொண்டாடி சின்ன தளபதிகளும், சின்னம்மாக்களும் வரவில்லை.முக்கியமாக இந்த பத்திரிகை கூட்டம் அவர்களின் வாரிசுகளுக்கு அரசியலில் இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. காரணம் ஒன்று தான். நம் தேசம் மீதான பாரம்பரிய பெருமை, பாசம், சுயநலமில்லாமை, மக்கள் மீது கொண்ட அக்கறை இவைதான்.
இந்த அரசியல் மாற்றம் ஒவ்வொரு கட்சியிலும் நடந்தாக வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.
இன்று அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ளது என்றால் அதற்கு ஒரே காரணம் அங்கே உள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தான். எந்த கட்சி மக்களுக்கு அதிகப்படியான நன்மை செய்யும் என்கிற விதமான போட்டி. யாரும் அங்கே மக்களின் உணர்வுகளை தூண்டி அதில் ஆதாயம் பெறுபவர்கள் இந்த அளவிற்கு இல்லை.
சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக தேசியவாதத்தை முன்னிறுத்தி அனைத்து மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்கள் என்ற நேர்மறை அரசியலை பிஜேபி எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றது.
இன்று வேண்டுமானால் திமுக போன்ற கட்சிகள் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் ஆள் சேர்க்கலாம். ஓட்டும் வாங்கலாம். ஆனால் எதிர்காலத்தில் சிறந்த கொள்கைகளாலும், தொலைநோக்கு திட்டங்களாலும் ஈர்க்கப்பட்ட கட்சியே ஜனநாயகத்தை சரியான திசையில் வழிநடத்தும்.
இது புரிந்ததால் தான் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்க்வி, சசி தரூர், பரம எதிரி என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் பிஜேபியின் ஒரு சில அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறார்கள்.
No comments:
Post a Comment