வாகன சோதனையின் போது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, சிறப்பு, எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகர போலீசார், கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று (அக்.,14) மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புவனகிரியில் இருந்து, ஒரு தம்பதி, இரண்டு குழந்தைகளுடன் பைக்கில் வந்தனர். அவர்களை நிறுத்திய போலீசார், ஆவணங்களை சரி பார்த்தனர். 'ஹெல்மெட்' உட்பட அனைத்தும் சரியாக இருந்தது. ஆயினும், நான்கு பேர் பயணம் செய்ததற்காக வழக்கு போடுவதாக போலீசார் கூறினர். இச்சம்பவம், சமூக வலைதளங்களில் பரவியது. போலீசாரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், சிறப்பு, எஸ்.ஐ., வேல்முருகன், போலீஸ்காரர் மரிய சார்லஸ் ஆகிய இருவரையும், பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து, எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் இன்று உத்தரவிட்டார். இருவரும், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு, கடலுார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

No comments:
Post a Comment