Tuesday, October 15, 2019

வருத்தம் தந்த நிகழ்வு:

புரட்டாசி சனிக்கிழமை. ..மிக பிரபலமான ஒரு பெருமாள் கோவில் சென்றோம்.. நாங்கள் செல்லும் வாசலில் துளசி மாலை வாங்கி சென்றோம்.. அந்த பெருமாள் மீது நம் கைகளில் உள்ள மாலை..என்று மிகவும் அன்பொடும், பக்தியோடு ம் வரிசை யில் நின்றோம்.. கூட்டம் கொஞ்சம் குறைந்தது.. கருவறை முன் உள்ள இடத்திற்கு கூட அனுமதி இல்லை கூட்டநெரிசல் தவிர்க்க..படி ஏறி மண்டபம் தாண்டி கருவறை , மக்கள் கருவறை தாண்டி பத்து அடிகள் (கிட்டதட்ட) செல்லும் போது அந்த பெருமாளின் எதிரயே தீபாராதனை காட்டப்பட்டது.. நாங்கள் கொடுத்த துளசி மாலை கீழே ஒரு கூடையில் போடப்பட்டது..பல மாலைகள் துவார பாலகர் கையில் மாட்டியிருந்த து..சரி கூடையில் போட்டு பெருமாளிடம் சேர்ப்பர் என நினைத்தேன்..பெருமாளே..என்ன ஒரு அக்கிரமம்...அதை எங்கள் கண் முன்னே ஒரு ஊழியர் எடுத்து வெளியே செல்கிறார்.. நாங்கள் கேட்டதற்கு வெளியே பிரகாரத்தில் உள்ள சின்ன சாமிகளுக்கு போட என்றான் அவன்.. தீர்த்தம் அர்ச்சனை பிரசாதம் வழங்கும் இடத்தில் உள்ள அய்யர் சொல்கிறார் ஆயிரம் ரூபாய் இங்கு வந்து விடனும் னு.. கொஞ்சமும் உறுத்தல் இல்லாமல்.. அந்த ஊழியரிடம் கேட்டோம் நாங்கள் ஆசையாய் இந்த பெருமாளுக்கு வாங்கி வந்தால்.. நீர் எங்கு எடுத்து செல்கிறீர் என்று... மாலை கட்டும் இடத்திற்கு என்று உளறி கொட்டுறார்.. முதலில் வேறு சாமி க்கு இப்ப கட்டும் இடத்திற்கு...சாற்றுவதற்கு வந்த மாலைகள் மீண்டும் கடைக்கே செல்கிறது..என்ன கொடுமை... இறைவன் எதிரிலே.. எந்த ஜென்ம புண்ணியமோ.. இறைவனின் திருவடியில் அவனுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைக்க
இவ்வாறு கும்பலாக மாலை யை விற்று சம்பாதிக்கும் பணம் அவர்களுக்கு எதை தரும்.. அர்ச்சகர் ஆகட்டும் அவர் அருகில் இந்த கேவல பணத்தில் பங்கு கேட்கும் அய்யராகட்டும்.. உள்ளே இருப்பவன் பெருமாள் என உனராதவரோ... பயமும் பக்தியும் இல்லா விசுவாசமில்லா ஊழியர்கள் எப்போது திருத்துவரோ.. நிம்மதி தேடி பெருமாளை காண சென்றால் மன வருத்தத்தில் வீடு திரும்பினோம்..

உண்மையாக சொல்கிறேன். கோவிலுக்கு சென்றால் அர்ச்சனை தட்டு, மாலை, நெய்தீபம் எதையும் கொண்டுபோகாதிர்கள். பகவானை மனதார சேவியுங்கள். விருப்பமிருந்தால் தட்டில் பத்து ரூபாய் போடவும். பிராமனாள் அய்யர் தட்சணை. மேலும் பசும் நெய் கொண்டு சென்றுதீபத்தில் ஊற்றவும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...