அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும், இரண்டு மேலடுக்கு சுழற்சிகளால், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில், மிக அதிக கன மழை பெய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. அக்., 16ல் துவங்கிய பருவமழை, வட மாவட்டங்கள் முதல் தென்மாவட்டங்கள் வரை, பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்றும், நாளையும் மிக கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் ஜெனரல் பாலச்சந்திரன் கூறியதாவது:தென் தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியிலும்; வங்கக் கடலின் தென்மேற்கில், தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு இடைப்பட்ட பகுதியிலும் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதேபோல, அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியும் நிலை கொண்டுள்ளது. இவற்றின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்யும். சில இடங்களில் மிக கன மழையும், சில இடங்களில் மிக அதிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், சில இடங்களில், மிக கன மழை பெய்யும்; மற்ற இடங்களில், பெரும்பாலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழக கடற்பகுதி, ஆந்திரா கடலோர பகுதி, கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா வரையிலும், கடலில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது.எனவே, இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதற்கிடையில், அரபிக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிஉள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா பகுதிகளில், தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
'ரெட் அலெர்ட்' மாவட்டங்கள் எவை?
திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். மேற்கண்ட மாவட்டங்களுக்கு, கன மழை பெய்யும் என, மஞ்சள் நிற எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், மிக கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு, மிக கன மழையை குறிப்பிடும், ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என்பதால், இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் கடும் எச்சரிக்கையாக, 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு உள்ளிட்ட, 15 முக்கிய அணைகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 198 டி.எம்.சி., இவற்றில் தற்போது, 163 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையால், அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கன மழை எச்சரிக்கையால், பல அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment