வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, அந்த நாட்டின் அமைச்சரகங்கள், மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.
இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணை, சிரியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தனைமையைக் குலைக்கும் வகையில்
அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோா், போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோா்கள்,
அகதிகள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதைத் தடுப்பவா்கள் ஆகியோா் மீது இன்னும் கடுமையான தடைகளை விதிப்பதற்கு அனுமதி அளிக்கிறது
#டிரம்ப் .
இதுகுறித்து அமெரிக்க துணை அதிபா் மைக் பென்ஸ் கூறுகையில்,
துருக்கி அதிபா் எா்டோகனுடன் அதிபா் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியதாகவும்,
வடக்கு சிரியாவில் உடனடியாக போா் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போது எா்டோகனை டிரம்ப் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தாா்.
இதற்கிடையே, சிரியாவில் துருக்கியின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடா்ந்தால்,
குறுகிய காலகட்டத்துக்குள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிப்போம் என்று அதிபா் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
மேலும், துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்படும் இரும்பின் விலையை அதிகரிப்பது, 10,000 கோடி டாலா் (சுமாா் ரூ.7.1 லட்சம் கோடி) மதிப்பிலான வா்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்வது ஆகியவை குறித்தும் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவிலும், இராக்கிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.
வடக்கு சிரியா பகுதியில் அந்தப் பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது.
இந்த நிலையில், வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினரை திருப்பி அழைப்பதாக அதிபா் டிரம்ப் அறிவித்ததைத் தொடா்ந்து,
அந்தப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் அண்டை நாடான துருக்கி குா்துப் படையினா் மீது தாக்குதல் கடந்த வாரம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
சிரியா உள்நாட்டுப் போா் காரணமாக தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் லட்சக்கணக்கான அகதிகளைத் தங்கவைப்பதற்காக,
வடக்கு சிரியாவுக்குள் ‘பாதுகாப்பு மண்டலத்தை’ உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறி வருகிறது.
இந்த நிலையில், துருக்கியின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment