Thursday, October 17, 2019

ஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள்; விழுந்தார் எம்.எல்.ஏ.,

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற, தி.மு.க.,வினரை கிராமத்தினர் தடுத்தனர். இதில், பெரியகுளம், எம்.எல்.ஏ., சரவணகுமார் கீழே விழுந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில், அக்., 21ல் தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் பணப் பட்டுவாடாவில் தீவிரமாக உள்ளனர்.மூலைக்கரைப்பட்டி அடுத்துள்ள கல்லத்தியில், பெரியகுளம், தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணகுமார் தலைமையில், தேனி மாவட்ட நிர்வாகிகள், தோட்டத்துடன் கூடிய வீட்டில் தங்கியிருந்தனர்.

நேற்று அங்கு, வாக்காளர்களை அழைத்து, ஓட்டுக்கு பணம் கொடுத்தனர். அதே ஊரைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தி.மு.க.,வினர் பண மூட்டைகளுடன், ஓட்டம் பிடித்தனர். இதனால், 2,000 ரூபாய் நோட்டுகள்கீழே சிதறின. அங்கிருந்து கிளம்ப முயன்ற,எம்.எல்.ஏ., சரவணகுமார் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
DMK, ஓட்டுக்கு, பணம், வழங்கல், தி.மு.க.,  விரட்டிய மக்கள்; விழுந்தார், எம்.எல்.ஏ.,

அங்கு, 2 லட்சத்து, 78 ஆயிரம் ரூபாய் சிக்கியது. தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஜனார்த்தனன், அவற்றை பறிமுதல் செய்தார். எம்.எல்.ஏ., உள்ளிட்ட 10 பேர் மீது, தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வடகிழக்கு பணமழை


நாங்குநேரியில் போட்டியிடுவது, காங்கிரசாக இருந்தாலும், பணப் பட்டுவாடாவை, தி.மு.க.,வே கவனித்தது. 70 சதவீதம் பேருக்கு தலா, 1,000 ரூபாய் கொடுத்து முடித்து விட்டதாக, தி.மு.க., தரப்பினர் கூறினர்.அ.தி.மு.க., தரப்பில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வீதம் கொடுத்துள்ளனர். இருதரப்பினரும், எதிர் தரப்பினர் பணம் கொடுப்பதை கண்டுகொள்ளவில்லை. இதனால்,
தடையின்றி பண வினியோகம் நடந்தது.

சீவலப்பேரியை அடுத்துள்ள பர்கிட் மாநகரம் பகுதியில், அ.தி.மு.க., கிளைச் செயலர்
காஜாமைதீனிடம் இருந்து, 1.08 லட்சம் ரூபாயை, பறக்கும்படை தாசில்தார் மோகன்
தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.களக்காடு பகுதியில்,
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் மாரியப்பனிடம் இருந்து, 39 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்மநேரி கிராமத்தில், திடீரென போலீஸ் வாகனம்
வந்ததால், அ.தி.மு.க.,வினர், 50 ஆயிரம் ரூபாயை சாலையில் போட்டு ஓடினர். பணத்தை,
தேர்தல் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...