ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில், வங்கியினர், வாகனத்தின் அசல் தொகையில், மானிய தொகையை வரவு வைப்பது இல்லை என்ற புகார் எழுந்து உள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள், ஸ்கூட்டர் வாங்க, மாநில அரசு, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தில் ஸ்கூட்டர் வாங்க, பெண்கள் ஆர்வம் காட்டும் நிலையில், மானிய தொகையை, வங்கிகள் வரவு வைப்பதில் குளறுபடி இருப்பதாக, பரவலாக புகார் எழுந்துள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள், ஸ்கூட்டர் வாங்க, மாநில அரசு, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தில் ஸ்கூட்டர் வாங்க, பெண்கள் ஆர்வம் காட்டும் நிலையில், மானிய தொகையை, வங்கிகள் வரவு வைப்பதில் குளறுபடி இருப்பதாக, பரவலாக புகார் எழுந்துள்ளது.
பயனாளிகள் சிலர் கூறியதாவது: தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, மாத தவணை அடிப்படையில், ஸ்கூட்டர் வாங்குகிறோம்; குறைந்தது, 60 முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை, ஸ்கூட்டருக்கான தொகையை செலுத்த வேண்டி இருக்கிறது. அரசு சார்பில், 'டிடி'யாக வழங்கப்படும், 25 ஆயிரம் ரூபாய் மானியத்தை, கடன் வழங்கும் வங்கி, தனியார் நிதி நிறுவனங்களிடம் வழங்கி, அசல் கணக்கில் வரவு வைக்குமாறு கூறுகிறோம்.
ஆனால், முழு தொகைக்கும் வட்டி கணக்கிட்டு, மாத தவணையாக பெற்று, தவணை முடியும் போது தான், அரசின் மானியத் தொகையை கழிக்கின்றனர். இதனால், கூடுதல் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. மானியத் தொகையை அரசு விடுவித்தவுடன், அசல் தொகையில் கழித்து, எஞ்சிய தொகையை மாத தவணை அடிப்படையில் வசூலிக்க, வங்கிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மகளிர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பயனாளிகள், சொந்த செலவில் வாகனம் எடுத்த பின், மானியம் விடுவிக்கப்படுகிறது. 'முழு தொகையை செலுத்தி வாகனம் எடுத்தால், பயனாளி களுக்கே முழுத் தொகை கொடுத்து விடுகிறோம். தனியார் பைனான்சில் எடுத்தால், சிக்கல் ஏற்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், இப்பிரச்னை இருக்காது' என்றனர்.
No comments:
Post a Comment