Wednesday, October 2, 2019

வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவதற்கான உண்மையான காரணம், தெரியுமா உங்களுக்கு?



 உலகில் மிகவும் தொன்மையான தனித்துவம் வாய்ந்த கலாச்சாரங்களில் ஒன்று இந்தியர்களின் கலாச்சாரமாகும்.
இந்திய கலாச்சாரத்தின் படி வயதில் பெரியவர்களின் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது என்பது அவர்கள் மீது இருக்கும் மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. நம் முன்னோர்கள் வகுத்த இந்த கலாச்சாரத்தின் படி என்னென்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
 உடலின் அடித்தளம்:
நமது உடலின் அடித்தளம் என்றால் அது நமது கால்கள் தான் ஒருவன் நிற்கும்போது அவர்களின் முழு எடையையும் அவர்கள் கால்கள் தான் தாங்கும்.
நாம் குனிந்து வயதில் பெரியவர்களின் காலை தொடும்போது நம்முடைய ஈகோ அடங்குகிறது. அவர்களின் பயணம், அனுபவம் ஆகியவற்றை நாம் மதிக்கிறோம். அவர்கள் மகிழ்ந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
 கால்களை தொடுவது: வழக்கமாக ஆன்மிக பெரியவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மூத்த சகோதரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் போன்றவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் போது வழக்கமாக இந்த மக்கள் நிறைய நல்லொழுக்கங்களை அறிவையும் அனுபவத்தையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்களிடமிருந்து வெளிப்படும் எண்ணங்கள் அதிர்வுகள் மற்றும் சொற்கள் அவர்களின் ஆசீர்வாதங்களை நாடுபவர்களுக்கு பெரிதும் பயன் அளிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
 பொதுவாக தங்கள் கால்களை தொடுவதற்கு கைகள் நீட்டப்படும் போது வலது கை அவர்களின் வலது பாதத்தை தொடும் விதத்திலும் இடது கை அவளின் இடது பாதத்தைத் தொடும் வகையிலும் கைகளை அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலம் நமது உடலானது புத்துணர்ச்சியை அடையும்.
 நேர்மறை ஆற்றல்: கால்களை தொட்ட நபர் வழக்கமாக தனது கைகளை நீட்டி ஆசீர்வாதத்தின் சைகையாக அவரின் தலையை தொடுவார்கள்.
பெரியவர்களின் கால்களை தொடுவதன் மூலம் வலிமை, புத்தி, அறிவு மற்றும் புகழ் ஆகியவற்றை
ஆசீர்வாதமாக பெறுகிறார்கள் என்று கூறுகிறது பாரம்பரியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...