Thursday, October 3, 2019

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை.

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை
ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை


















தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1/2 கப்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

செய்முறை :

ஓட்ஸை கடாயில் போட்டு 5 நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பொடித்த ஓட்ஸை போட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து கிளறவும்.

தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஆறியவுடன் பிடிகொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...