சென்னை டிரைவரை கொலை செய்து, காரை கடத்திய வழக்கில், இளம்பெண் உட்பட, நால்வரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே, சாவரப்பட்டியில் உள்ள பாசன கால்வாயில், செப்., 15ல் ஒருவர் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், சென்னை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த, கார் டிரைவர் நாகநாதன், 51, என தெரிந்தது.ஆசை வார்த்தைகொட்டாம்பட்டி போலீசார் விசாரித்தனர். குற்றாலம் செல்வதற்காக காரை, 'புக்' செய்த, சென்னையைச் சேர்ந்த ஜெயசுதா, 24, என்ற பெண் தலைமறைவானது தெரிந்தது. அவரை, திருச்சியில் போலீசார் கைது செய்தனர்.அவரது தகவல்படி, அவரது காதலன் ஹரிகரன், 30, பெரோஸ் அகமது, 34, ஜெகதீஷ், 24, ஆகிய மூவரை கைது செய்தனர்.
போலீசார் கூறிய தாவது:சென்னையில், ஜெயசுதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், பெரோஸ் அகமது. பொருளாதார நெருக்கடியில் இருந்த ஜெயசுதாவிடம், காரை கடத்தி விற்று சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.இதையடுத்து, ஜெயசுதா, புதுச்சேரி ஓட்டல் ஒன்றில், தன்னுடன் வேலை செய்த ஜெகதீஷ் மற்றும் காதலன் ஹரிகரன் உள்ளிட்டோரை கூட்டாளிகளாக சேர்த்து, திட்டம் தீட்டினார். சென்னை அகர்வால் டிராவல்ஸ் நிறுவனத்தை, செப்., 5ல் தொடர்பு கொண்டு, 'குற்றாலம் செல்ல வேண்டும்' எனக் கூறி, காரை ஜெயசுதா, 'புக்' செய்தார்; நாக நாதன் ஓட்டினார்.
தகவல்
குற்றாலத்தில் இருந்து, செப்., 9ல், சென்னை திரும்பும் வழியில், கொட்டாம்பட்டி, சாவரப்பட்டி அருகே, நாகநாதனை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து, கால்வாயில் வீசி, காரை கடத்தி, திருச்சி சென்றனர்.உறையூரில் காரின் கலர், நம்பர் பிளேட்டை மாற்றுவதற்காக, பெயின்டர் ஒருவரிடம் காரை விட்டனர். சந்தேகமடைந்த பெயின்டர், உள்ளூர் போலீசிற்கு தகவல் தெரிவிக்க, நால்வரையும் கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment