இவர் பெயர் ஸ்டாலின் - ரஷிய மொழி.
இவரது தகப்பனார் பெயர் கருணாநிதி - சமஸ்கிருதம்
இவரது கட்சி பெயர் திராவிட மு.க - திராவிட என்பது சமஸ்கிருதம்
இவரது கட்சி சின்னம் உதயசூரியன் - சமஸ்கிருதம். (எழு ஞாயிறு என்பதே தமிழ்ச்சொல்)
ஆனால் இவருக்கு தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் மட்டும் ஆகமவிதிகளை மீறி தமிழில் நடத்த வேணுமாம். ஏன்யா அப்படி, உனக்கு தான் இந்து மத கடவுள் நம்பிக்கையே இல்லையே, கோயிலில் எந்த மொழியில் கும்பாபிஷேகம் நடந்தால் உனக்கென்ன என்று கேட்டால் சொல்றார் பாருங்க,
அவருக்கு தமிழ்ப்பற்றாம்.
அப்படிங்களா, அது சரி போன முறை 1998ல் இதே தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்த பொழுது தமிழகத்தில் நீங்க தான் ஆளுங்கட்சி, உங்க அப்பாரு தான் முதலமைச்சர்,தமிழக இந்து அறநிலைய துறை உங்க கையில தான் இருந்தது,அப்போ ஏன் தமிழில் கும்பாபிஷேகம் செய்ய உத்தரவு போடல...? அப்போ உங்க தமிழ்ப்பற்று எங்கே போனது...?
என்னயா உங்க பித்தலாட்டத்தனம், ஆளுங்கட்சியா இருக்கும் போது ஒரு நிலைப்பாடு,எதிர்கட்சியா இருக்கும் போது நிலைப்பாடு..?
இவனுங்களையும் நம்பி ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவனுங்க இப்படியே ஏமாத்திக்கிட்டே தான் இருப்பானுங்க...!தெளிவு பெற வேண்டியது நாம தான்.
தமிழகத்தில் உள்ள புராதன கோயில்கள் தமிழக இந்துக்களுக்கு மட்டுமே வழிபாட்டுதலம் அல்ல.கோயில்கள் எல்லாமே அனைத்து உலக இந்துக்களுக்குமே பொதுவான வழிபாடு தலங்கள்.. எனவே பல நூறு ஆண்டு காலமாக நடந்து வரும் பழம் பாரம்பரிய வழக்கப்படியே கோயில் கும்பாபிஷேகம் அனைத்து உலக இந்துக்களின் பொதுவான வழிபாடு மொழியான சமஸ்கிருதத்திலேயே நடப்பது தான் சிறப்பு...!
இந்து சாஸ்திர,சடங்குகளை மொழி ரீதியாக பிளவுபடுத்தி இந்து மதத்தின் வலிமையை குறைத்து அதில் குளிர்காய துடிக்கும் அந்நிய கைகூலிகள் போடும் தமிழ்பற்றாளன் வேஷத்தை இனம் கண்டு புறக்கணிப்போம்...!
தமிழில் நடத்தப்பட்ட காவிரி புஷ்பரகத்தையும்,தாமிரபரணி புஷ்பரகத்தையும் எதிர்த்து நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தப்பார்த்த அதே அந்நிய கைகூலிகள் தான் இன்று தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தமிழில் நடக்க வேண்டும் என்று தமிழ்ப்பற்றாளன் முகமூடியை போட்டுக்கொண்டு வந்து ஊலையிடுகிறது...!
தமிழக மக்களே இந்த இந்து விரோதிகளின் அந்நிய கைகூலிகளின் முகமூடி அனிந்த வேஷத்தை நம்பி ஏமாறாமல் தஞ்சை பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகத்தை பாரம்பரிய வழக்கப்படியே நடத்தி ஈசன் அருள் பெற்று நிறைமதியான வாழ்கை வாழ்வோம்...!
*#ஈசனே_போற்றி.!*
No comments:
Post a Comment