ஒரு பெரிய நடிகருடன் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார்,”தம்பி நான் வாய்ப்பு கேட்டு அலைந்தபோது கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக எத்தனையோ பேர் என்னை புறக்கணித்தார்கள் ஆனால் அவர்களே இன்று என்னுடைய கால்ஷீட்க்காக வெயிட் பண்ணுகிறார்கள்”
காலமும்,வாழ்வும் சுற்றும் சக்கரம் போன்றது எப்போதும் மாறக்கூடியது என புண்சிரிப்புடன் சொன்னார்.
மனிதருக்கு மூன்று விசயங்கள் தாங்கிகொள்ள முடியாத மன வலியை கொடுக்கக்கூடியவை
அவமானப்படுதல்,நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாகுதல்,மற்றவரால் புறக்கணிக்கப்படுதல்..
அவமானப்படுதல்,நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாகுதல்,மற்றவரால் புறக்கணிக்கப்படுதல்..
வாழ்வில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவமானபட்டியிருப்பார்கள்,நம்பிக்கை துரோகங்களை சந்தித்து இருப்பார்கள் அல்லது புறக்கணிக்கபட்டு இருப்பார்கள்.
எதற்கும் லாயக்கில்லை என புறக்கணிக்கப்பட்டவர் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கிறார் ”உனக்கு கதையே சொல்லத்தெரியவில்லை நீ எல்லாம் எங்க உருப்பட போறே”என வெளியே தள்ளப்பட்ட உதவி இயக்குனர்கள் இந்தியாவே போற்றும் அளவுக்கு பெரிய இயக்குனர்கள் ஆகி இருக்கிறார்கள்.
ஓவ்வொரு மனிதருக்கு ஒவ்வொரு அழகான தனித்திறமைகள் இருக்கிறது நாமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யாராலும்
புறக்கணிக்கப்பட்டோ,அவமானப்பட்டோ இல்லையென்றால் நம்பிக்கை துரோகத்திற்கு இலக்காகி இருக்கலாம்.
புறக்கணிக்கப்பட்டோ,அவமானப்பட்டோ இல்லையென்றால் நம்பிக்கை துரோகத்திற்கு இலக்காகி இருக்கலாம்.
யார் நம்மை புறக்கணித்தாலும்,அவமானபடுத்தினாலும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் கடந்து வாருங்கள்.
இவரை வாழ்வில் நாம் தவறவிட்டுவிட்டோமே,அவமானபடுத்தி விட்டோமே,புறக்கணித்துவிட்டோமே என நம்மை புறக்கணித்தவர்களை,அவமானபடுத்தியவர்களை எண்ண வைப்பதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் சரியான பதிலடியாகும்.
No comments:
Post a Comment