Monday, January 20, 2020

கடவுளை நம்பினோர் கைவிட் மாட்டார்.

பட அதிபர் சின்னப்ப தேவரை நாம் அறிவோம்.
சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்.
சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.
மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர்.
முப்பது முப்பத்தைந்து வயது வரை, அவரது வாழ்க்கை கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.
அப்போதும் அவர் நாணயத்தையும் நேர்மையையும் விட்டதில்லை.குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலை பார்த்தார்.
அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.
அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக்
கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகி விட்டது.கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.
அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா! முருகா!’ என்று அழுவார்.அந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.
கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்; “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.
நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்த மலையை விட்டு இறங்கினார்.
வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது.அதைக் காலால் உதைத்துக் கொண்டு நகர்ந்தார்.
கொஞ்ச தூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?
அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார்.உள்ளே இரண்டு சிகரெட்டுகளும், பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.அப்போது அவரது மனநிலை எப்படி
இருந்திருக்கும்?
“நல்லவனாக வாழ்ந்தோம்; தெய்வத்தை நம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்றுதானே எண்ணியிருக்கும்!
அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.
ஒவ்வொரு நாளும், “முருகா! முருகா!” என்று உருகுகிறார்.
“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார்.
அதனால், அவர் நாளுக்கு நாள் செழித்தோங்குகிறார்.
நீயும் நல்லவனாக இரு.
தெய்வத்தை நம்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...