இந்தியாவின், 71வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள மசூதிகளில், முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
மத்திய அரசின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.நாட்டில் முதலாவதாக, கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், உச்ச நீதி மன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, கேரளா முழுவதும் உள்ள மசூதிகளில், நேற்று, முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. 'தேசிய ஒருமைப்பாட்டினை காப்பற்றும் வகையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றுவதுடன், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என, மாநில வக்பு வாரியம் சார்பில், மசூதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதனால், அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடி ஏற்றி, குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எதிர்க்கும் நடவடிக்கைகளுக்கு நடுவில், வக்பு வாரியம் சார்பில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment