Tuesday, January 21, 2020

குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி.

குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி


















தேவையான பொருட்கள் :

குடைமிளகாய் - 3
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிதளவு
கருவா பட்டை - சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி

செய்முறை:

குடைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தக்காளி பூண்டு சீரகம் இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கருவா பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை கொட்டி கிளறவும்.

அடுத்து அதில் குடை மிளகாயை சேர்க்கவும்.

அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

கிரேவி பதத்துக்கு வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...