திடீரென்று கூட்டத்தில் பெண்களைப் பார்த்து, “இங்கு யாராவது பத்தினிகள் இருக்கின்றீர்களா? இருந்தால் கையைத் தூக்குங்கள் ” என்று சொல்வார் ஈவேரா...
யாருக்கும் உடனே பதில் சொல்லத் தோன்றாது.
“எங்கே பத்தினியா இருக்கற ஒரு பெண் எழுந்து நின்னு மழை வரச் சொல்லி சொல். வருதா பார்ப்போம்” என்பார்.
எல்லோரும் அமைதியாகவே இருப்பார்கள்.
கட கடவென பெரிய தொப்பை குலுங்க சிரிப்பார்.
சில தமிழின துரோகிகளும் சேர்ந்து கை தட்டி சிரிப்பாங்க.
உலகத்துல யாருக்குமே தெரியாத மிகப்பெரிய விஷயத்தை தான் கண்டுபிடிச்சிட்ட மாதிரி ஈ.வெ.ரா சிரித்து மகிழ்வார்.
பின்னர் “நீங்க பத்தினி இல்லேன்னு அர்த்தம் இல்லை. உங்க வள்ளுவன் அயோக்கியன்னு அர்த்தம். பத்தினிங்க பெய்னு சொன்னா உடனே மழை பெய்யும்னு வள்ளுவன் சொல்றான். மடையன்தானே அவன்?” என்று வள்ளுவரையும் திருக்குறளையும் இழிவாக பேசுவார்.
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
பெய்யெனப் பெய்யும் மழை.
என்கிற திருக்குறளைத் தான் அவர் இப்பிடி கேவலமாக பேசுவார்.
மேலோட்டமாகப் பார்த்தால் அதன் அர்த்தம் அதுதான்.
தெய்வத்தைக் கூட தொழாமல் தன் கணவனையே தெய்வமாகத் தொழும் பத்தினிப் பெண்கள் பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும் என்பதே அதன் பொருள் என்று எல்லோரும் சொல்லுவார்கள்.
இது ஈ.வெ.ராவுக்கு மிகவும் சாதகமாக இருந்தது.
அதைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்மறையைக் கேலி பேசினார்.
ஆனால் எனக்குப் புரிபட்ட வகையில் இதன் பொருள் வேறு.
திருக்குறளை ஊன்றிப் படிக்கும் பொழுது வேறு அர்த்தம் வருகிறது அந்த குறளுக்கு. அது என்னவென்று பார்க்கலாமா?
இதே வள்ளுவர் இன்னொரு இடத்தில் மழையைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூ உம் எல்லாம் மழை
எடுப்பதூ உம் எல்லாம் மழை
அதாவது வள்ளுவப் பெருந்தகை இரண்டு மழைகளைப் பற்றிப் பேசுகிறார்.
ஒன்று கொடுக்கும் மழை இன்னொன்று கெடுக்கும் மழை.
நிலத்தைப் பண் படுத்தி, ஆழமாக ஏர் உழுது விதைகளை விதைத்திருப்பான் விவசாயி.
அன்று இரவு மழை பெய்தால் பரவாயில்லையே என்று ஏங்கி வேண்டுவான்.
அப்படியே பெய்தால் அது கொடுக்கும் மழை. அதாவது பயிர்களை வாழ வைக்கும் மழை.
பயிர் நன்றாக விளைந்து முற்றித் தலை கவிழ்ந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும்.
அடுத்த நாள் விடியற்காலையில் அறுவடை.
தந்சாவூரில் இருந்து ஆட்களும் அறுப்புக்கு வந்தாயிற்று.
அன்று இரவு மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விளைந்து நின்ற பயிர்களை நாசம் செய்தால் அது கெடுக்கும் மழை.
ஒரு மழை, பெய்யாதா என்று ஆசைப் படும் போது பெய்யும் மழை.
இன்னொன்று பெய்யக் கூடாதே என்று வேண்டும் போது பெய்து நாசம் விளைவிக்கும் மழை.
இதில் பத்தினி என்பவள் எப்படிப் பட்டவள்?
அவள் பெய்யென பெய்யும் மழைக்கு சமமானவள்.
அதாவது மழை பெய்தால் தேவலையே என்று விவசாயிகள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது பெய்யும் மாமழை போன்றவள்.
தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும்
பெண் = பெய்யென பெய்யும் மழை.
பெண் = பெய்யென பெய்யும் மழை.
அதாவது அவ்வளவுக்கு சமுதாயத்திற்கு நன்மை செய்து உதவும் மா மழை போல இனிமையானவள், நன்மை பயப்பவள்.
புரிகிறதா?
இதைத்தான் உலகப் பொது மறையாம் வள்ளுவம் பேசுகிறது.
பத்தினிப் பெண் = பெய்யெனப் பெய்யும் மழை.
இப்பொழுது சொல்லுங்கள்.
யார் முட்டாள் ?
யார் முட்டாள் ?
No comments:
Post a Comment