நமது இல்லங்களில் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி அல்லது குல தெய்வத்தின் பேர்களை வைப்பது எனும் பழக்கம் நம்மைவிட்டு மறைந்துவிடும் பேல இருக்கே. நல்லதல்ல.
கேட்டால் ஏதாவது விதண்டாவாதம் - இந்த பேரை அங்கிருந்து எடுத்தோம், இங்கு வருகிறது என எதையாவது சொல்லுவது. இவர்களுக்கு ‘மாடர்ன்’ தேவை. தாத்தா பாட்டி, குல தெய்வ பேர்கள் அனைத்தும் அநாகரிகம். என்னத்தை சொல்ல?
பேர் வைக்கும்போது இல்லத்து பெரியோர்களை ’கன்ஸல்ட்’ செய்வதே இல்லை. தங்களது குழந்தைக்கு பெயர் வைப்பது ‘தங்களது உரிமை’ எனும் ஒரு மாயையில் விழுந்துள்ளார்கள் பலர். இது நல்லதல்ல.
நமது குழந்தைகள் ’நம்ம குழந்தைகளாக’ வளரவேண்டும் எனில் பேரும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை நாம் மறக்கலாகாது. குழந்தைகள் வயாதான பிறகு தங்களது பேரை நினைத்து பார்க்கும்போது தனது தாத்தா பாட்டி அல்லது ஸ்வாமி பேர் நினைவில் உதிக்கும்போது அவர்களுக்கு ஏற்படுகிற ஆத்மார்த்தமான உணர்ச்சிக்கு ஈடு ஏது? நமது குடும்ப பாரம்பரியத்தில் அவர்களுக்கு பெருமை உண்டாகுவதற்கு பெயரும் சஹாயம் செய்யும்.
இன்னொரு கூத்தும் ஆங்காங்கு நடைக்கிறதையும் கேள்விப்படுகிறோம். ஜோசியரை கன்ஸல்ட் செய்யும் கூத்து. அந்த எழுத்து இந்த எழுத்து முதலில் வரனும் என கூத்தடிப்பது. ஜோஸியரின் பங்கு இங்கு எங்கு வருகிறர்து? புரியவில்லை. எதற்கு ஜோஸியரை பார்க்க வேண்டும் என இருக்கிறது அல்லவா. நிச்சயம் இதற்கு இல்லை. நாம்தான் முடிவு செய்ய வேண்டும். எந்த எழுத்து முதலில் வந்தால் என்ன, வரவிட்டால் என்ன? இம்மெடிரியல். தாத்தா பாட்டி குல தெய்வ பேர்களை தான் வைக்க வேண்டும்.
நாமகரணம் நமக்கு ஸ்ரேஷ்டமாக எடுத்துள்ள ஒரு சம்ஸ்காரம்.
நாமகரண சம்ஸ்காரம் நடக்கும் அன்று ஏதோ ‘ரிசுவலாக’ நடந்துக்கொண்டுவிட்டு பிறகு நமது இஷ்டத்துக்கு பேரை குழந்தைக்கு ‘அஃபிஷியலாக’ ஆக்குவது நம்மளை நாம் ஏமாற்றிக்கொள்ளுவது தான்.
No comments:
Post a Comment