ஒரு கோவிலில் ஒரு அர்ச்சகர் இருந்தார்... அந்த கோவிலின் பின் பகுதியில் ஒரு பூனைக்குட்டி சில நாட்களாக சுற்றி வந்தது... அந்த அர்ச்சகர் அதற்கு பால் ஊற்றி பாதுகாத்து வந்தார்...ஒரு நாள் அந்த பூனை குட்டி மரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு கீழே இறங்க பயந்துகொண்டு இருந்தது...அர்ச்சகரும் பாலை கீழே வைத்து அழைத்து பார்த்தார்... ஆனால் அது கீழே இறங்க பயப்பட்டது...அர்ச்சகர் என்ன செய்யலாம்
என்று யோசித்தார்...
மரத்தின் மேல் ஏறும் அளவிற்கு மரகிளை வலிமையானதல்ல...எனவே ஒரு கயிற்றை கொ்க்கியுடன் வீசி மர கிளையை கயிற்றை பிடித்து இழுத்து வளைத்தால் பூனை குதித்து விடும் என்று யோசனை செய்த்து அது படி செய்தார்...கயிறை இழுக்க கிளை வளைந்து கீழ் நோக்கி வந்தது... ஆனால் கொக்கி வழுக்கிவிடவே கிளை வேகமாக தன்னிலைஅடைய பூனைக்குட்டி தூக்கி எறியபட்டு கண்ணை விட்டு மறைந்தது...அர்ச்சகர் தன்னால் முடிந்த வரை பூனை குட்டியை தேடினார்... கிடைக்கவில்லை...மனம் வருந்தி இறைவனிடம் தான் செய்த தவறால் பூனைக்குட்டிக்கு ஆபத்து நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் அவர் கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணை மளிகைகடையில் கண்டு நலம் விசாரித்தார். அந்த பெண் கூடையில் பூனைக்கான பிஸ்கட் இருப்பதை பார்த்து வீட்டில் பூனை வளர்கிராயா என்று கேட்டார்...
அந்த பெண் இல்லை சாமி என் மகள் இரண்டு நாட்களாக பூனை குட்டி வேண்டும் வளர்க்க என்று என்னிடம் கேட்டாள்... நான் மறுக்கவே அவள் அழுக ஆரம்பித்தாள்...நானும் அவளை சமாதானப்படுத்த கடவுளிடம் பூனை குட்டி கேள்... அவர் கொடுத்தால் நாம் வளர்த்தலாம் என்று சொன்னேன்... என் குழந்தை உடனே அங்கேயே கண்னை மூடி பூனைக்குட்டி வேண்டி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.. என்ன ஆச்சரியம்... ஒரு பூனைகுட்டி ஆகாயத்தில் கால்களை விரித்த படி பறந்து வந்து குழந்தை காலடியில் விழுந்தது... பிறகு அதை எடுத்து பால் கொடுத்து வளர்க்கிறோம் என்று சொன்னாள்... அர்ச்சகர் கடவுளின் லீலையை மனதில் எண்ணியபடி கடவுளின் கருணையே கருணை என்று சொல்லி நகர்ந்தார்...
நீதி : யாரை எப்படி எங்கு எப்பொழுது சேர்க்க வேண்டும் என்பது கடவுளுக்கு நன்கு தெரியும்..
No comments:
Post a Comment