Wednesday, January 22, 2020

கனிமொழிக்கு திருமணம் நிச்சயிக்கப் படுகிறது.மணமகன் பெயர் #அதிபன்_போஸ்.

சிவகாசி சார்ந்த ஒரு பணம் படைத்த  தொழிலதிபர் குடும்பத்தைச் சார்ந்தவர். தகப்பனார் பெயர் ‘சுபாஷ் சந்திர போஸ்.’ தாயார் பெயர் ‘காஞ்சனா போஸ்.’ பல வருடங்கட்கு முன்பு இக்குடும்பம் தேசபக்தியுடன் இருந்திருக்கக் கூடும்.மன்னித்து விடலாம்.

இச்சமயம் இந்தியன் வங்கி அதிபருக்கு ஒரு போன் வருகிறது.  அங்கு அப்போது  #கோபாலகிருஷ்ணன் என்பவர் உயரதிகாரியாக இருந்தார். இவர் ஒரு பாரம்பரியம் மிக்க #காங்கிரஸ் குடும்பத்தை சார்ந்தவர். பழகுவதற்கும் இனிமையானவர். அவருடைய இளமையில் மிகுந்த நேர்மையோடும் துடிப்போடும் இருந்தவர் தாம்.

Image may contain: 2 people, people smiling, sunglasses and closeupஇப்போது இந்த கோபாலகிருஷ்ணன் #சிறையில் இருக்கிறார். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.  ஆனால் அவர் உதவி (!) செய்த அனைத்து #பெருச்சாளிகளும் (கட்சி வேறுபாடுகள், ஜாதி சங்க வேறுபாடுகள் – போன்றவைகளுக்கு அப்பாற்ப்பட்ட பெருச்சாளிகள் இவர்கள் எல்லோரும்)  அவரைக் காப்பாற்றவில்லை. சீந்துவார் இல்லாமல் இருக்கிறார், பாவம். இப்பெருச்சாளிகளில், கருணாநிதியின் அடிப்பொடிகளும் அடக்கம். இவர்களால் பல்லாயிரம் கோடி ஸ்வாஹா – வயிறு பற்றி எரியவேண்டிய விஷயமிது.

கதை சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா?

… போனில் நல்ல செய்தி. கனிமொழிக்குத் திருமணம். நடக்கவிருக்கும் செய்தி – இந்தியன் வங்கியின் உதவி தேவை. ஆஹா! பேஷாக! அவசரமாகப் பணம் பட்டுவாடா பண்ண வேண்டும், யாருக்கு – போஸ் குடும்பத்தினருக்கு அப்படியே செய்கிறோம்..தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம்.

இந்தியன் வங்கியின் துறைமுகம் கிளையிலிருந்து அடுத்தநாள் சில ஊழியர்கள் செல்கின்றனர் – சென்னை வந்து தங்கியிருக்கும் போஸ் குடும்பத்தை நோக்கி! அவர்கள் இடமிருந்து ஒற்றைக் காகிதங்களில் கடிதம் வாங்கிக் கொள்கின்றனர். நகைப்புக்கிடமான இக்கடிதங்களின் சாராம்சம்: ‘எனக்குச் சொந்தச்செலவுக்காக பணம் வேண்டும்.’

அவர்களுக்கு உடனடியாக கீழ்கண்ட அளவு பணம் கொடுக்கப் படுகிறது:

அதிபன் போஸ்: பத்து லட்சம்; சுபாஷ் சந்திர போஸ்: இருபத்தைந்து லட்சம்; காஞ்சனா போஸ்: பத்து லட்சம்.

எப்படி? Clean Overdraft ஆக! ஒரு விதமான அடமானம், #கியாரண்டீ ஒரு இழவும் இல்லாமல். தஸ்தாவேஜுகள் சரிஇல்லாமல். ஒரு கேள்வி கூட கேட்காமல். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டு… கருணாநிதி #சோழனின் மகள் அல்லவா? நம் தமிழ் #இளவரசி அல்லவா, கனிமொழி? மக்கள் பணம் என்றால் மகேசன் பணம் தானே?  அதுவும் அற்ப நாற்பத்தைந்து லட்சம் தானே. 

ஆஹா! #அடுத்தவீட்டுநெய்யே..... 
#என்பொண்டாட்டிகையே!

சுப்பனுக்கும் குப்பனுக்கும் இப்படி தூக்கிக் கொடுப்பார்களா என்று நீங்கள் கேட்டால் – #சமூகநீதி உங்கள் வீட்டிற்கு ஆட்டோவில் வரும். எங்கள் தலீவரை என்ன மசுருக்கு இஸ்கரே என்று உங்களுக்கு அர்ச்சனை நடக்கும்.  எலும்புகளை உடைக்கும். 

#பேய் அரசு செய்தால் #பிணம் எண்ணும் சமூக நீதி…

… எப்படியோ, திருமணமும் நன்றாக நடைபெற்றந்து. வேறு எவ்வளவு இடங்களின் இருந்து மண்டகப்படி போயிற்றோ! எவ்வளவு பேர் கப்பம் கட்டினார்களோ! ஆனால் வருந்தத் தக்க விதத்தில் திருமணம் விவகாரத்தில், மன்னிக்கவும் இந்த கூகிள் எடிட்டர் சரியில்லை – #விவாகரத்தில் முடிந்தது.

ஆனால் 1989இல்  அள்ளப்பட்ட இப்பணம் திருப்பி #கொடுக்கப்படவே_இல்லை – பத்து வருடங்களுக்குப் பின்னும் இதே கதைதான். #கடனாளியைக் கண்டு பிடிக்க  முடியவில்லையாம்.. கருணாநிதிக்கோ அல்லது கனிமொழிக்கோ இதன் பற்றிய #கவலை இருந்தால் தானே – இவர்களா பணம் கொடுத்தார்கள்? என்ன இருந்தாலும் எவர் திருப்பிக் கொடுப்பார்கள் வரதட்சிணையை? அதுவும் போயும்போயும் அற்ப நாற்பத்தைந்து லட்சம் தானே! அது இப்போது குட்டி போட்டு சிலபல கோடிகள் தானே! வங்கியும் இவற்றை #தள்ளுபடி செய்தது. வழக்கா போடமுடியும் பிசாத்து பெறாத பத்திரங்களை வைத்துக் கொண்டு?

ஆக கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாரின் மண்டையிலேயே ஓங்கி உடைத்த மகாத்மியம் தான்  #கருணாநிதியின் மகத்தான கைங்கர்யம். வாழ்க அவரது குற்றம்!

அம்மணி சம்பந்தப்பட்ட ஊழல்கள் அப்போதே ஆரம்பித்து விட்டன. மேலும் அவர் மட்டும் இல்லை – இக்குடும்பத்தைச் சார்ந்த அனைவருமே சமதர்மமாக #மக்கள்_பணத்தை மகேசன் பணமாக மாற்றியுள்ளனர். என்னே அவர்கள் பணப்பணி! அல்லது பணப்பிணி அல்லது பிணப்பணி…—–

ஆனால் – சில நண்பர்கள், வங்கி செய்ததிற்கு கருணாநிதியோ அல்லது கனிமொழியோ எப்படி பொறுப்பாக முடியும் என்று வினவலாம்.

உண்மைதான் நண்பர்களே! 

கருணாநிதி இந்த வரதட்சிணை கொடுக்கவில்லை. கனிமொழியும் இக்காரியம் செய்யவில்லை. 

கொடுத்தது எண்ணிறந்த #இந்திய_மக்கள். பண்டாரப் பரதேசிகள் – ஆனால், நேர்மையானவர்கள், வரி ஒழுங்காகக் கட்டுபவர்கள் – ஒரு பீடி வாங்கினாலும் கூட…

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...