இயக்குனர் ஸ்ரீதர் திரையுலகில் பலத்த நஷ்டங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் உரிமைக்குரல் மூலம் மறுவாழ்வு பெற்றார். இப்படத்தில் ஒப்பந்தம் செய்ய ராமாவரம் இல்லத்திற்கு ஸ்ரீதர் செல்ல முடிவெடுத்தார். அதற்கு எம்ஜிஆர், வேண்டாம், அப்படி செய்தால் உங்களுக்கு கவுரவக் குறைச்சலாக பிறர் பார்வையில் படும். எனவே நாம் இருவரும் பொதுவான ஒரு இடத்தில் சந்திப்போம். அது நம்பியார் வீடோ அல்லது தேவரின் அலுவலகமாவோ இருக்கட்டும். நான் அங்கு வருகிறேன் என்றார். ஆனால், ஸ்ரீதரோ இல்லை சார், பிறர் என்ன நினைத்தாலும் கவலையில்லை. நான் உங்கள் இடத்திற்கு வந்து சந்திப்பதுதான் முறை என்று கூறி எம்ஜிஆரின் இல்லத்திற்கே வந்தார்.
அப்படத்தில் தலைவர் நடிப்பதற்கு முன் தன் உதவியாளரிடம் லெட்டர்பேடை கொண்டுவரச்செய்தார். அதில் விறுவிறுவென ஏதோ எழுதி கையெழுத்திட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார்.
. ஏற்கெனவே ஸ்ரீதருக்கும் எம்ஜிஆருக்கும் " அன்று சிந்திய ரத்தம்" படத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டதால் தன்னிடம் உறுதிபத்திரம் எழுதிவாங்குவதாக ஸ்ரீதரும் நினைத்தார். தலைவரை விட்டால் தனக்கு உதவ யாருமில்லை என்று நினைத்து கையெழுத்திட துணிந்தார். அப்போது எம்ஜியார் முதலில் அதை படித்து பாருங்கள் என்றார். அதை படித்த ஸ்ரீதர் கண்கலங்கிவிட்டார்! ஆம்! எம்ஜியார் எழுதியிருந்த விபரம் இதுதான்! எம்.ஜி.ராமச்சந்திரனாகிய நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் செய்துகொடுக்க ஒப்புகொண்டுள்ளேன். இந்த படத்தை மூன்று மாதங்களில் முடித்துக்கொடுக்கிறேன். எனவே ஸ்ரீதருக்கு பைனான்ஸ் செய்பவர்களுக்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்" என எழுதி கையெழுத்திட்டிருந்தார் பொன்மனச் செம்மல்! ஸ்ரீதருக்கு பேச நா எழவில்லை. அதுபோக தனக்கு ஸ்ரீதர் பேசிய சம்பளத்தொகையில் தான் முன்பு "அன்று சிந்திய ரத்தம்" படத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையான 25,000/- ரூபாயை கழித்துக் கொள்ளவும் சொன்னதும் ஸ்ரீதர் திக்கு முக்காடிப் போனார்.
No comments:
Post a Comment