தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, எந்தக் கோவிலின் பூஜைகளும் கும்பாபிஷேகமும் அதற்குரிய ஆகம விதிகளின்படியேதான் நடத்தப்படவேண்டும்.
அதன்படி பெரிய கோவில் கும்பாபிஷேகம் மகுடாகமத்தின்படி நடக்க வேண்டும் என்று பெரியவர்கள் பலர் கூறியிருக்கின்றனர்.
மகுடாகமம் என்றால் என்ன ?
சைவ ஆகமங்கள் 28, அதில் தமிழகத்தின் பெரும்பாலான சிவன் கோவில்கள் “காமிக ஆகமத்தின்” அடிப்படையில்தான் அமைந்துள்ளன. பொதுவாக கோவில்களின் கட்டமைப்பை நிறுவி அதன்பின் கருவறையில் விக்ரகப் பிரதிஷ்டை செய்து இறை சக்தியை நிறுவுவது வழக்கம்.
மாறாக விக்ரகப் பிரதிஷ்டையிலிருந்து தொடங்கி கருவறை,சுற்றுப் பிரகாரங்கள் முதலானவற்றை அமைப்பது “மகுடாகம முறை”. தில்லை,திருவாரூர் ஆகிய கோவில்கள் மகுடாகம முறையில் அமைந்தவை.
இந்தக் கோவில்களை வழிபட்டுவந்த சோழ வம்சத்தின் ராஜராஜன், தான் கட்டிய கோவிலையும் அதே முறையில் அமைத்ததில் வியப்பில்லை. குடவாயில் பாலசுப்பிரமணியன், டாக்டர் நாகசாமி முனைவர் சங்கரநாராயணன் ஆகிய அறிஞர்கள் பெரிய கோவில் மகுடாகமத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
இதற்கான ஆதாரங்கள் என்ன?
முதலாவது, குறுகிய வாயில் கொண்ட கருவறையில் அமைந்துள்ள மிகப்பெரிய லிங்கத்திருமேனி..அந்த விக்ரகம் அமைந்த பிறகே மற்ற கட்டுமானங்கள் எழுந்தன என்று சுட்டுகிறது தவிர, மூலவருக்கு மேலே விமானத்தில் அமைந்துள்ள வெற்றிடமான பரவெளி, விமானத்திற்குப் பொன் வேய்ந்தது, விமானத்தின் கோஷ்டங்களில் அமைந்துள்ள சதாசிவ மூர்த்தங்கள் ஆகியவை மகுடாகமத்தின் அடிப்படைகளாகும்.
இப்படி அணுஅணுவாக சிந்தித்து ராஜராஜப் பெருவேந்தன் கட்டிய கோவிலில் அதற்குரிய ஆகமத்தை விடுத்து இப்படித்தான் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று அரசியல் செய்வது, அதுவும் தெய்வநம்பிக்கை இல்லாத கூட்டம் வலியுறுத்துவது பெரும் கேடு. கோவில் ராஜராஜனுடையது. அவன் அமைத்த வழிமுறைகளை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.
அடுத்து
நீங்க கைவைக்க மாற்ற நினைப்பது வெகு சாதரணமான பாத்ரூம் டைல்ஸ் கொண்டு புதுசா கட்டிய பாபா கோவில் அல்ல..இது ராஜராஜ சோழன் இன்னும் உயிர்ப்புடன் உள்ள பெரிய கோவில்...நான் தான் என அகங்காரத்துடன் எந்த தலைவன் கோவிலில் கால் வைத்தாலும் அழிந்த கதை தான் இங்கே அதிகம்...நம்மை விட உயர்ந்தவன் சிவனே.. அணுவை விட மிக சிறிய துகள் நாம்.. நம்மை விட பெரியன் இங்கு எம்பெருமான் ஈசனே என்ற எண்ணத்தில் இந்த கோவிலில் கால் வைத்தவன் சிறப்புடன் வாழ்வதும் உண்டு...
இதற்க்கும் உதாரணமும் நிறைய உண்டு..சூட்சுமமாக இன்னமும் இங்கே ராஜராஜன் உலாவிக்கொண்டுள்ளான்...இதை எல்லாம் காதில் வாங்காமல் எவன் பெரிய கோவிலில் அதை மாற்ற போகுறேன் இதை மாற்ற போகிறேன் என கிளம்பினால் அழிவு நிச்சயம்...
No comments:
Post a Comment