இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர் தான் நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்.
ஒடிசாவின் கட்டாக்கில் 1897 ஜன., 23ல் வசதியான குடும்பத்தில் பிறந்தார். 1920ல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். சுதந்திரப் போராட்டம் மீதான ஈடுபாட்டால், சிவில் சர்வீஸ் பணியை ஒரே ஆண்டில் ராஜினாமா செய்தார். காந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காங்கிரசில் இருந்து பிரிந்து
போராடினார்.
காந்தியின் அகிம்சை வழியில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவரை 'இந்திய தேசத்தின் அடையாளம்', 'இந்தியாவின் தேசத் தந்தை' என முதலில் குறிப்பிட்டவர் நேதாஜி.
நாட்டுக்காக 11 முறை சிறை சென்ற நேதாஜியின் வாழ்வில், 20 ஆண்டுகள் சிறையிலேயே
கழிந்தன.ஆங்கிலேயருக்கு காந்தியைவிட அதிக நெருக்கடி கொடுத்தவர் நேதாஜி. அதனால் அவரைப் பல முறை நாடு கடத்தியது பிரிட்டஷ் அரசு.
ராணுவம் அறிமுகம்
ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற நேதாஜி, விடுதலைப் போராட்டத்தில் நாடு கடத்தப்பட்டசுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவப் படையைஉருவாக்கினார். இதில் 85ஆயிரம் வீரர்கள் இருந்தனர்.பெண்கள் படைபிரிவையும் ஏற்படுத்தினார் இது ஆசியாவில் முதல் பெண் ராணுவப் படை என்ற பெருமை பெற்றது.தன் உயிரைப் பணயம் வைத்துச் சுதந்திரத்துக்காகப் போராடிய நேதாஜி, 1945 ஆக., 18ல் விமான விபத்தில் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

வானொலி சேவை
இரண்டாம் உலகப்போரின் (1942) போது நேதாஜி, ஜெர்மனியில் இருந்து கொண்டே, 'ஆசாத் ஹிந்த் வானொலியை' தொடங்கினார். இது பல மொழிகளில் செய்திகளையும், அவரது
பேச்சுகளையும் ஒலிபரப்பியது. இவை இந்திய மக்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்த புரட்சி படையினருக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்த பயன்பட்டது.
'ஜெய்ஹிந்த்'
சுதந்திர போராட்டத்தில் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம் நாட்டு மக்களிடையை தேசிய உணர்வை தட்டி எழுப்பியது. இதனை முதன்முதலில் கூறியவர் நேதாஜி. 1941 நவ., 2ல், ஜெர்மனியில்,
இவரது 'சுதந்திர இந்தியா மையம்' துவக்க விழாவில் 'ஜெய்ஹிந்த்' (வெல்க இந்தியா) என்ற கோஷத்தை முழங்கினார்.
No comments:
Post a Comment