Wednesday, March 4, 2020

வடபழனியில் கோவிலை இழுத்து மூட மிஷினரிகள் பலே திட்டம்! மிஷினரியுடன் கைகோர்த்த அறநிலையத்துறை அதிகாரி சித்ராதேவி!

வடபழனி முருகன் கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடப்பது வழக்கம். இந்த பள்ளி அறை நிகழ்வை காண நாளுக்கு நாள் தினமும் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளி அறை நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் எணிக்கையை படிப்படியாக குறைத்து, இறுதியில் வடபழனி முருகன் கோவிலில் நடக்கும் பள்ளியறை நிகழ்வுக்கு மூடுவிழா நடத்த அந்த கோவிலின் அறநிலையத்துறை அதிகாரி சித்ராதேவி மிஷிநரிகளுடன் இணைந்து போட்ட பலே திட்டம் அம்பலமாகியுள்ளது.
இந்த கோவிலில் அறநிலையத்துறை அதிகாரியாக இருக்கும் சித்ராதேவியின் கணவர் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் வடபழனி கோவில் அதிகாரி சித்ராதேவி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பர் சீமான் மற்றும் கிருஸ்துவ மிஷினரி துணையுடன் வடபழனி கோவிலில் நடைபெறும் பள்ளி அறை நிகழ்ச்சியை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கே நடக்கும் பள்ளியறை நிகழ்ச்சியால் கிருஸ்துவ மிஷினரிகளுக்கு மதம் மாற்றம் செய்ய பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவரின் மனைவி அறநிலையத்துறை அதிகாரி சித்ராதேவி உத்தரவின் பேரில் பள்ளியறைக்கு வரும் பக்தர்களிடம் கட்டண வசூல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்து, கடந்த இரண்டு நாட்களாக வசூல் வேட்டை நடந்து வருகிறது. இந்த வசூல் வேட்டை தொடர்வதால் நாளுக்கு நாள் பள்ளியறைக்கு வரும் பக்தர்கள் வருகை குறைத்து வருகிறது; நாளடைவில் பக்தர்கள் வருகை குறைவை காரணம் காட்டி இந்த பள்ளியறை நிகழ்வை நிறுத்துவதுதான் சித்ராதேவி கிருஸ்துவ மிஷினரிகளிடம் இணைந்து போட்ட திட்டம் என்கின்றனர் பக்தர்கள்.
மேலும் தொடர்ந்து இந்து மதத்தையும், இந்துக்கள் வழிபடும் கடவுள்களையும் இழிவாக பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமேடையில் பேசுகையில், வடபழனி முருகன் கோவிலுக்கு ஒவ்வொரு முறையும் செல்லும்போதும் கோவில் நிர்வாகம் தனக்கு பயந்துகொண்டு சிறப்பாக வரவேற்பு கொடுப்பதாகவும், அதற்கு காரணம் கோவில் அதிகாரியாக இருப்பவர்கள் நமது ஆட்கள் என வெளிப்படையாக பேசியிருப்பது, கோவில் அதிகாரி சித்ராதேவி மிஷினரியுடன் சேர்ந்து செயல்படுகிறாரா? என சந்தேகம் வலுத்துள்ளது.
மேலும் வடபழனி கோவிலில் நடக்கும் பள்ளியறை நிகழ்வை இழுத்துமூட நடக்கும் சதி திட்டங்கள் பற்றி கோவில் நிர்வாகத்தை சந்தித்த ஆன்மீக இந்து மக்கள் கட்சியின் தலைவர் JSK.கோபி, அங்கே நடக்கும் கட்டண வசூல் பற்றி கேட்க, சித்ராதேவிதான் கட்டணம் வசூலிக்க சொன்னார்கள் என கோவில் ஊழியர்கள் பதில் கொடுத்துள்ளனர். மேலும் இந்த கட்டண வசூலை நிறுத்தவில்லை என்றால், இந்துக்கள் அனைவரையும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என JSK.கோபி அறநிலையத்துறை அதிகாரி சித்ராதேவியை எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...