Sunday, March 1, 2020

ஸ்வீட் மேங்கோ ஊறுகாய் - வெல்ல மாங்காய் ஊறுகாய்.

தேவையான பொருட்கள்:

புளிப்பு நிறைந்த மாங்காய் - 40
மிளகாய்த்தூள் - 350 கிராம்
உப்பு- 5 கப்
கடுகுப்பொடி - கால் கப் (கடுகை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்)
வெந்தயம்- கால் கப் (வறுத்துப் பொடிக்கவும்)
கட்டி பெருங்காயம்- 35 கிராம்
வெல்லம் - 4 கப்
நல்லெண்ணெய்- மூன்றரை கப்
மஞ்சள்தூள் - அரை கப்
செய்முறை:
கொட்டையை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக மாங்காயை நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் 3 கப் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி வைக்கவும்.
மறுநாள், மாங்காயை ஈரம் போக உதறி, ஒரு தட்டில் வைத்து, வெயிலில் நன்கு உலர வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி வைக்கவும். உலர்ந்த மாங்காயை ஒரு பெரிய பாத்திரத்தில் பரப்பி மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி வைக்கவும்.
ஒரு பெரிய வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், பெருங்காயத்தைத் தட்டி அதில் போட்டு, பொரித்து எடுத்து தனியே வைக்கவும். ஆறியதும் இதனை மிக்ஸியில் பொடித்து வைக்கவும். இந்த எண்ணெயில் பாதியை மாங்காயில் ஊற்றி, அதன் மேல் மீதம் இருக்கும் இரண்டு கப் உப்பு, கடுகுப்பொடி, வெந்தயப்பொடியைச் சேர்த்துப் பிசிறி வைக்கவும். இதனை ஒரு ஜாடிக்கு மாற்றவும்.
வாணலியில் மீதம் இருக்கும் சூடான எண்ணெயில் பொடித்த பெருங்காயத்தைச் சேர்த்துக் கிளறி ஜாடியில் ஊற்றி, ஜாடியின் வாயைத் துணியால் வேடு கட்டி வைக்க வேண்டும்.
முதலில் சில நாட்களுக்கு ஊறுகாய் நீர்க்க இருக்கும். நாளாக நாளாக ஊறுகாய் தன்மைக்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...