Friday, March 20, 2020

இன்று சங்கடங்கள் தீர்த்து, சகல வரங்கள் அருளும் சனி மகாபிரதோஷம்!

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி மகா பிரதோஷம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிவனை வழிபட ஏற்ற
காலம் மாலை நேரம்,
அதிலும் சிறந்தது சோமவாரம், (திங்கட்கிழமை)
அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி,
அதிலும் சிறந்தது பிரதோஷ காலம்.
இதிலும் சிறந்தது பிரதோஷ காலத்தில் சோமசூக்தப் பிரதட்சண முறையில் வழிபடுவது. இப்படி பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்.. சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்
நீறு இல்லா நெற்றி பாழ்,
நெய் இல்லா உண்டி பாழ்,
ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்,
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்,
மடக்கொடி இல்லா[த] மனை பாழ்.
ருத்திராட்சம் அணியாத உடம்பு பாழ்,
சிவன் கோவில் இல்லாத ஊர் பாழ்,
சிவபூஜை செய்யாத ஜென்மமே
பாழ் பாழ் பாழ்...
ஆகவே சனி மகா பிரதோஷ தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று
வழிபடுவோம்! சிவனருள் பெறுவோம்!
ஓம் சிவாய நமஹ !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...