Tuesday, March 3, 2020

குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம் :

நம் பூஜை அறையில் எத்தனையோ தெய்வத்தின் படங்களை வைத்து பூஜை செய்வோம். பரிகார தலங்களாக சில கோயில்களுக்கு சென்று வழிபடுவோம், பழனி, திருப்பதி, ராமேஸ்வரம், சபரிமலை போன்ற பிரபல புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்கிறோம்...
ஆயினும் இதுவனைத்திலும் முதன்மையாக குலதெய்வ வழிபாடே இருக்க வேண்டும். இன்று நிறைய பேருக்கு குலதெய்வம் எதுவென்றே தெரிவதில்லை.
நமக்கு ஒரு தீமை நடக்கப் போகிறதென்றால் குலதெய்வமே நம்மை காக்க முதலில் வருமாம். பில்லி, சூன்யம் வைப்பவர்கள் குலதெய்வத்தை வாய்கட்டிய பிறகே பிறருக்கு சூனியம் வைக்க முடியுமாம். நமக்கு ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறதென்றால் குலதெய்வம் வந்து சில அபசகுண அறிகுறிகள் காட்டி நம்மை எச்சரிக்கை செய்யுமாம்...
குல தெய்வத்தின் அனுமதி பெற்ற பிறகு தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். குலதெய்வ வழிபாட்டை ஆண்டிற்கு மூன்று முறையாவது மேற்கொள்ள வேண்டும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வதே சிறப்பு. பிறந்த குழந்தையை மூன்றாம் மாதம் முதலில் குலதெய்வ கோயிலுக்கு சென்ற பிறகே பிறகோயிலுக்கு குழந்தையை கொண்டு செல்ல வேண்டும். குலதெய்வ வழிபாட்டை கிராமங்களில் பங்காளிகளோடு சேர்ந்தே செய்வார்கள். இல்லாவிட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடும் என்பார்கள். நம் முன்னோர்கள் முட்டாள்களல்ல....

குல தெய்வத்தை வைத்தே அவர்கள் சைவமா? அசைவமா?
எந்த சாதியில் எந்த கோத்திரம் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். ஒரே குல தெய்வத்தை வழிபடுவர்களுக்குள் பெண் கொடுப்பதோ எடுப்பதோ செய்ய மாட்டார்கள்...
குலதெய்வத்தை பற்றி எவ்வளவோ பேசலாம். குலதெய்வத்தின் வழிபாட்டு முறை அறிந்து வழிபடுவோம், குலதெய்வத்தை கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...