நம்ம பயங்கொண்டார் அடுத்த தமிழக தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடவேண்டும் என்ற வெறியில், பிரஷாந்த் கிஷோரின் வியூகங்கள் அனைத்தையும் அப்படியே செயல் "படுத்துவது" என்று முடிவு செய்து ஊர் ஊராக ஊர்மேய சென்றாராம். சும்மா பார்த்தால் போதாதே, அந்த ஊரில் என்ன பிரச்சினை என்று கேட்டு, அதை தீர்ப்பதை போல் காண்பித்து கொள்ளவேண்டும் என்று பிரஷாந்த் கிஷோர் உத்தரவே போட்டு விட, அதை வேதவாக்காக ஏற்றுக் கொண்டு உடனடியாக செயல்படுத்த முயன்றாராம்.
முதலில் சென்ற ஊரில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்க, அவர்களும் தங்களுக்கு இரு பெரிய பிரச்சினைகள் உள்ளன என்று கூறிவிட்டு, முதலாவதாக ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரே வருவதில்லை என்று சொன்னார்களாம். உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு போன் போடுவதாக பாவ்லா செய்து உடனடியாக இங்கு டாக்டரை அனுப்பி வைக்கவும் என்று கூறி விட்டு போனை வைத்துவிட்டு, மக்களை நோக்கி உங்கள் பிரச்சினை தீர்ந்தது. நாளையே டாக்டர் வருவார் என்று கூறி விட்டு, அடுத்தது என்ன பிரச்சினை என்று கேட்டாராம்.
மக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து, "எங்கள் ஊரில் மொபைல் சிக்னலே கிடைப்பதில்லை என்பது தான் எங்களது இரண்டாம் பிரச்சினை. ஆனால் நீங்கள் எங்கள் இரு பிரச்சனைகளையும் ஒரே காலில் தீர்த்து விட்டீர்களே! உங்கள் மொபைலில் சிக்னல் கிடைத்தது ஒரு ஆச்சரியம் என்றால், எங்கள் ஊர் பெயர் தெரிவிக்காமலேயே நாளை முதல் இங்கு பணிக்கு ஒரு டாக்டரை வேறு அமர்த்தியிருக்கிறீர்களே, அது மற்றும் ஓர் ஆச்சரியம். சூரியன் திரைப்படத்தில் வரும் கவுண்டமணி கேரக்டருக்கு பிறகு அரசியலில் இவற்றையெல்லாம் சாதாரணமாக செய்வது நீங்கள் ஒருவர் மட்டுமே தொளபதி என்று சொல்லி சிரித்து வைத்தார்களாம்.
No comments:
Post a Comment